மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் சேக் அப்துல்லாஹ் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று கலந்துரையாடினார்.
அப்போது அதிகார பதவிகள் இருந்தாலும். இல்லாவிட்டாலும் மக்களுக்கான நமது சேவைகள் தொடரும் என்றார். சமூக நீதிக்கான அரசியலையும், சமூக நல்லிணக்கத்திற்கான பணிகளையும் உறுதியாக செய்வோம் என்றும், நமது நேர்மையான அரசியலை மக்கள் விரும்புவதாகவும் கூறினார்.
தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு காலத்தில் தொண்டர்களின் உயிர் பாதுகாப்பு, அவர்களின் பொருளாதார நெருக்கடிகளை எல்லாம் கவனத்தில் கொண்ட நிலையில், இனி வழக்கம் போல் சளைக்காமல் களமாடுவோம் என்றும் சூளுரைத்தார்.
கலந்துரையாடலுக்கு பிறகு மாவட்டத்தில் 3 இடங்களில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் மஹ்ரூப், கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் காதர் பாட்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், தம்மாம் மண்டல நிர்வாகி ஹஜ் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் இஃப்ராகிம் ஷா, முகம்மது இஃப்ராகிம், முகம்மது பாருஃக் மற்றும் அணி, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக குடந்தை நகர செயலாளர் ராஜ் முகம்மது நன்றியுரை நிகழ்த்தினார்.
முன்னதாக பொதுச் செயலாளர் அவர்கள் கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் காதர் பாட்ஷா மகள் திருமணத்தை ஒட்டி, அங்கும் சென்றும் மணமக்களை வாழ்த்தினார்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
10.07.2021
https://m.facebook.com/story.php?story_fbid=3571083816324701&id=700424783390633