மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி கிழக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா மாவட்ட செயலாளர் கமாலுதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாணவர் இந்தியா மாநில தலைவர் ஜாவித் ஜாபர், மாநில செயலாளர் பெரியார் கார்த்தி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அலுவலகத்தை மஜக வினரின் முழக்கங்களுக்கிடையே துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்.
பின்னர் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிமுன்அன்சாரி, நீலகிரி கிழக்கு மாவட்ட பொருளாளர் காலிப், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் ஹமீது, தப்ரேஸ், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மாவட்ட துணை செயலாளர் அதிப், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் சாதிக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் உசேன், மாவட்ட பொருளாளர் மன்சூர், பரீத், மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
10.07.2021