திமுக தலைவருக்கு மஜக சார்பில் வாழ்த்து!

மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர்!

சென்னை:மே.05., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில், பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது பொதுச்செயலாளர் அவர்கள் பேராசிரியர் கே.எஸ்.ராமகிருஷ்ணராவ் எழுதிய முகமது நபி (ஸல்) என்ற நூலையும், ஆசிரியர் கி.வீரமணி எழுதிய பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் என்ற நூலையும் அவருக்கு பரிசளித்து வாழ்த்து கூறினார்.

பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலச் செயலாளர் சீனி முஹம்மது, மாநில துணைச் செயலாளர் சமீம் அகமது, ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWing
#தலைமையகம்
05.05.2021