புதுகை.ஆக.19., தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) சார்பில் நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி நகரில் நேற்று மாலை 4.30 மணியளவில் நிவாரண நிதி திரட்டும் பயணம் துவங்கியது.
இந்நிகழ்வு செக்போஸ்ட் – பெரியகடைவீதி – கட்டுமாவடிமுக்கம் – காமராசர் சிலை – பஸ்டான்ட் – அண்ணாசிலை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
மஜக மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் அஜ்மீர் அலி, ஒளி முகம்மது, சைய்யது அபுதாஹிர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் முபாரக் அலி நிதி திரட்டும் அவசியம் குறித்து விளக்கி பேசி பயணத்தை துவக்கிவைத்தார்.
இந்த நிகழ்வின்போது மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் முஜி, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் அப்துல் கனி, நகர செயலாளர் ஜகுபர் சாதிக், நகர துணைச் செயலாளர் சாகுல் அமீது ஒன்றிய பொருளாளர் முகம்மது குஞ்சாலி, ஒன்றிய துணைச் செயலாளர் யாசர் அரபாஃத் ஆகியோர் வீடுவீடாக சென்று நிதி திரட்டினார்கள்.
தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிதி திரட்டும் பயணத்தின் இறுதியில் கிடைக்கும் மொத்த நிதி மற்றும் பொருட்களை மஜக மாநில நிவாரண பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உரிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
18.08.18