You are here

மஜக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

திருப்பூர்.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹைதர்அலி தலைமை தாங்கினார்
மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக
தலைமை செயற்குழு உறுப்பினர் Pm.இக்பால்
கலந்துகொண்டார்.

சிறப்பாக நடைபெற்ற இந்த நிர்வாக கூட்டத்தில்

1.எதிர்வரும் செப்டம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் சிராஜ் மஹாலில் நடைபெற இருக்கும்.
மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

2.பொதுச்செயலாளரின் திருப்பூர் வருகைக்கு பிறகு
ஏராளானமானோர் கட்சியில் இணைந்து வருகின்றனர்
இதில்ப்பிற சமுதாய அமைப்பு கட்சி நிர்வாகிகளும் அடக்கம்
வந்த சகோதரர்களை கண்ணியப்படுத்தும் வகையில் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவதென தீர்மானிக்கப்பட்டது.

3.மேலும் தென்காசியில் நடைபெற்ற தலைமை செயற்குழுவில் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் கட்சியின் வளர்ச்சி குறித்து வழங்கிய ஆலோசனைகள் குறித்து விரிவாக சகநிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டது.

4.சமுதாய பணியில் ஆர்வமிக்கவரான சகோதரர் முஜிமுர் ரஹ்மான் அவர்களை மாவட்ட துணைச்செயலாளராக நியமனம் செய்யக்கோரி தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலளார்கள், மீரான், லியாகத் அலி,ஈஸ்வரன். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஸ்வான்.மாவட்ட இளைஞரணி செயலாளர் அசாருதீன்.தகவல் தொழில்நுட்ப அணி காதர்கான். ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருப்பூர்_மாவட்டம்
15-08-2018

Top