மஜக சிதம்பரம் நகர ஆலோசனை கூட்டம்..!

கடலூர்.ஆக.15., இன்று சிதம்பரத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) நகர அலுவலகத்தில் சிதம்பரம் ரபீக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜாகிர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்த முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்பது, கட்சி கொடியை நகரம் முழுவதும் ஏற்றுவது, சுற்றுபுற பகுதிகளில் கிளைகளை அமைப்பது என பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

பின்னர் 72 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர நிர்வாகிகள் இரத்ததானம் செய்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரியாஸ், பூதகேணி நைனா முஹம்மது, சிதம்பரம் நிர்வாகிகள் ஹபிபுல்லா, அப்துல்லா, அசார், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்