You are here

72வது சுதந்திர தின விழா..! அறந்தாங்கி ஒன்றியம் அரசர்குளம் பகுதியில் மஜக சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது..!!

அறந்தாங்கி.ஆக.15., இந்திய திருநாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அரசர்குளம் பகுதியில் நடைபெற்றது.

காலை 8.30 மணியாளவில் மாவட்ட துணைச் செயலாளர் ஒளி முகம்மது தலைமையில் அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் ரஜாக் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் சுதந்திரதின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இறுதியாக கிளை செயலாளர் முகம்மது அலி ஜின்னா அனைவருக்கும் நன்றி கூறினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.

Top