You are here

72வது சுதந்திர தின விழா..! அறந்தாங்கி அக்னிபஜார் பகுதியில்  மஜக சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது..!

அறந்தாங்கி.ஆக.15., இந்திய திருநாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி அக்னிபஜார் பகுதியில் நடைபெற்றது.

காலை 8 மணியாளவில் நகர செயலாளர் ஜகுபர் சாதிக் தலைமையில் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் முஜி, நகர துணைச் செயலாளர் அபுதாஹிர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் முபாரக் அலி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அனைவரும் சுதந்திரதின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இறுதியாக நகர பொருளாளர் அப்துல் கரீம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்

Top