You are here

மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த வேலூர் கிழக்கு மாவட்ட மஜகவினர்.

வேலூர்.ஆக.04.,. வேலூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக வந்திருக்கும் #திரு_பர்வேஷ்_குமார் (IPS ) அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் #முஹம்மத்_யாஸீன் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் காவல் துறை என்பது நல்லோர்க்கு நண்பர்களாகவும், தீயோர்க்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்க வேண்டும் என்றும் மக்களின் அமைதி, மக்களின் பாதுகாப்பு, மக்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதே காவல் துறையின் அடிப்படைக் கடமை என்று உணர்ந்ததால் தான் தமிழக காவல் துறை ஸகாட்லாந்து காவல் துறைக்கு அடுத்தாக பாராட்டப்பட வேண்டிய இடத்தில் உள்ளது எனவும் மஜக-வினர் என்றைக்கும் மக்கள் நலன் பணிகளில் காவல் துறைக்கு உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது மாவட்ட பொருளாளர் குஸ்ரு கௌஸ் மொஹிதீன், துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், இளைஞர் அணி செயலாளர் அமீன், வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமீல், மனிதஉரிமை அணி செயலாளர் முஹம்மத் சலீம், வர்த்தகர் அணி துணை செயலாளர்கள் அத்திக்குர் ரஹ்மான், சர்வர், அசார் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING.
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
04.08.2018

Top