கோயில்,பள்ளிவாசல், தேவாலயங்கள் புனரமைக்க அரசு மானியம்! சட்டசபையில் வரவேற்று மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு..

(பாகம் – 09)

தமிழக அரசு கோயில்,பள்ளிவாசல், தேவாலயங்களை புனரமைக்க பல்வேறு திட்டங்களை வளங்கிருக்கிறது இவ்வற்றையெல்லாம் உள்ளடக்கிய அறிவிப்புகளுக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சட்டசபையில் நன்றி தெரிவிட்டு பேசினார் அவரின் உரைக்குப்பின்வருமாறு மாண்புமிகு பேரவைத் மாற்றுத் தலைவர் அவர்களே….

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மானிய கோரிக்கை விவாதத்தில் பேச வாய்ப்பளித்ததற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆரோக்கியமான விமர்சனங்கள், நேர்மையான எதிர் கருத்துக்கள், தோழமைக்கு நலம் சேர்க்கும் காரணிகளாகும். உண்மையான நட்பு என்பது மாறுபட்ட கருத்துக்களை எதிரொலிப்பதும், அதை சகித்துக் கொண்டு தீர்த்து வைப்பதும் தான் என்பதை நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம்.

அந்த அடிப்படையில் இந்த அரசினுடைய பல்வேறு நடவடிக்கைகளை நான் மனமார பாராட்டி இருக்கின்றேன். பல நடவடிக்கைகளை ஆரோக்கியமான முறையில் விமர்சித்து இருக்கின்றேன்.

அந்த வகையில் நம்முடைய அரசு பல நல்ல அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதை இந்த நேரத்தில் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் நெகிழி என்னும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்திக்கும், பயன்பட்டிருக்கும் தடை விதித்திருக்கும் இந்த அரசின் துணிச்சலான முயற்சியை மனமார பாராட்டுகின்றேன். அதுபோல இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலகமெங்கும் பரவி இருக்கக்கூடிய தமிழர்கள் நடத்தக்கூடிய அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு மாநாட்டினை ஐந்து கோடி ரூபாய் ரூபாய் செலவில் நடத்துவோம் என்று அறிவித்ததற்காகவும்,உலகமெங்கும் வாழக்கூடிய தமிழ் அமைப்புகளின் சார்பில் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதுபோல சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்களுக்கு பல்வேறு வகைகளிலே, பல்வேறு திட்டங்கள், ஒவ்வொன்றாக சுட்டிக்காட்ட நேரம் இல்லாததாலும், காலத்தின் அருமை கருதியும், மொத்தமாக முஸ்லிம் சமுதாய மக்களுடைய நலனுக்காக இந்த அரசு 8 கோடியே 53 லட்சம் ரூபாயை ஓதிக்கியிருப்பதற்காக என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். புனித ரமலான் மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அம்மாவின் வழியிலேயே தரமான அரிசியை விலையில்லாமல் வழங்கியதற்காக கூடுதல் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதுபோன்று கிறிஸ்தவ மக்களிடையே ஒரு அதிருப்தி இருந்தது. பொதுவாக உலகமெங்கும் குறிப்பிட்டு வருகின்ற கி.மு.., கி.பி.., என்று விவகாரத்திலே ஒரு புதிய குழப்பமான ஒரு சூழ்நிலை உருவாகி இருந்த போது, இன்றைய தினம் நம்முடைய மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் மிகச் சிறப்பான முறையில் இந்த அரசு சிறுபான்மையின மக்களுடைய நலன்களை மதிக்கக்கூடிய அரசு என்று சொல்லிவிட்டு, மீண்டும் கிமு, கிபி என்ற வகையிலே ஆண்டுகள் குறிக்கப்படும் என்று சொன்னதற்காக என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிறிஸ்தவர்களுடைய தேவாலயங்களை புனரமைப்பதற்காகவும், அவர்கள் ஜெருசலேம் செல்வதற்காகவும், இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கியதற்காகவும், அதே போன்று எங்களுடைய தொப்புள்கொடி உறவுகளான இந்து சமய மக்களுடைய ஆலயங்களை பராமரிப்பதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கியதற்காகவும், இந்த அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

மூன்று மதங்களுடைய வழிப்பாட்டு உரிமைகளுக்கு தமிழக அரசு வழங்கிவரும் மானியக் கோரிக்கைகளை இவர் மட்டுமே சிலாகித்து பேசியதை சக உறுப்பினர்கள் பாராட்டினர்.

மேலும் தனது உரையில் உலாமாக்கள் நல வாரியத்திற்கு ஒரு துணை தலைவரை தமிழக அரசு நியமிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

தமிழக அரசின் நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியார் கார்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்க கூடாது என்றும் அவற்றை சாலை பணியாளர்களுக்கே கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக மக்களின் பல்வேறு கோரிக்கைகளையும்,எதிர்ப்பார்ப்புகளையும் சிறப்பாக பதிவு செய்ததாக தலைமை செயலக பத்திரிக்கையாளர் அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்