சிங்கப்பூர்.மே.19., இன்று சிங்கப்பூரில் #B_S_அப்துல்_ரஹ்மான் பல்கலைக்கழக (#கிரஸண்ட்) முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய #இஃப்தார் நிகழ்வில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பங்கேற்றார்.
பிரபல சமூகசேவை நிறுவனமான ஜாமியாவின் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் , அவரை சங்கத்தின் தலைவர் #இப்ராகிம் ,மற்றும் நிர்வாகிகளான #யூசுப், #ராஜகணேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
#மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதில் பேசியதாவது ,
பல இன மக்களும் இணைந்தும், கலந்தும் வாழும் சிங்கப்பூரில் B.S.அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும் இந்நிகழ்வில், B.S.அப்துல் ரஹ்மானை நினைவு கூறுவது அவசியம் என கருதுகிறேன் .
அவர் கடும் உழைப்பால் உயர்ந்தவர். #MGR-க்கும், #கலைஞருக்கும் இடையில் ஒரே நேரத்தில் நண்பராக திகழ்ந்தார் . அதனால் தான் இருவரின் ஆட்சியிலும் அவர் பல திட்டங்களை ஒப்பந்தங்கள் மூலம் செயல்படுத்தினார்.
அண்ணா மேம்பாலம், மெரீனா லைட் ஹவுஸ், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூலகம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, புதிய சட்டமன்றம் என பல கட்டிடங்களை இவரது நிறுவனம் தான் கட்டியது. நவீன சென்னையின் உருவாக்கத்தில் இவரது பங்கு முக்கியமானது .
MGR அவர்கள் இவரது நட்பை மதித்து “மேரா நாம் அப்துல் ரஹ்மான்” என வாலியிடம் கூறி இவரது பெயரை பாடலில் சேர்த்தார்.
MGR உடல்நலன் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் இருந்தபோது , அவரை நேரில் சென்று பார்த்தார் #BSA.
சுதந்திர இந்தியாவில் சொந்தமாக கப்பல்களை வைத்திருந்த ‘#நவீன_கப்பலோட்டி_தமிழர்’ இவர்தான் .
பினாங்கு, கொழும்பு, ஹாங்காங் என வணிகம் செய்துவந்த இவர் . ஹாங்காங், இங்கிலாந்திடமிருந்து சீனாவின் கட்டுபாட்டுக்கு மாறுவதாக அறிவித்ததும், இவர் எதிர்கால சூழலை கருதி, துபையில் தனது ETA வணிக சாம்ராஜ்யத்தை தொடங்கினார் .
அங்கு அபுதாபியில் அவர் ஒரு கிளினிங் கம்பெனியை நடத்தினார். அதில் நஷ்டம் ஏற்பட்டு மூட வேண்டிய நிலை வந்தது ஆனால், பலர் சொல்லியும் அதை அவர் மூடவில்லை. காரணம், அதில் வேலை செய்த ஏழை தமிழ் தொழிலாளர்களின் குடும்பங்களை நினைத்து பார்த்தார். அவர் தான் #BSA .
டாட்டா, பிர்லா, அம்பானி, அதானி வரிசையில் அவர் இருந்தார். ஆனால் , அவர்களிடம் இல்லாத ‘கொடை உள்ளம்’ இவரிடம் இருந்தது.
கொல்கத்தாவுக்கு சென்றபோது, ஒரு அனாதை இல்லம் அங்கு உருவாக காரணமாக இருந்தார்.
டெல்லியில் ‘ இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தை’ உருவாக்கினார்.
ஹாங்காங்கில் ‘கவ்லுங்’ பள்ளிவாசலை கட்ட அவர் உலகம் முழுக்க வசூல் செய்ததை மறக்கவே முடியாது. அவர் ‘ஈகோ’ பார்க்காத பணக்காரர் .
எனது தொகுதியில், நாகூரில் அவர் உருவாக்கிய ‘ கிரஸண்ட் பெண்கள் பள்ளிக்கூடம்’ இன்று ஏராளமான பெண் அறிவாளிகளையும், படிப்பாளிகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அவர், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், கலாச்சார மையங்கள், வழிபாட்டுத்தலங்களை, அனாதை இல்லங்கள் உருவாக துணைநின்றார்.
அதுபோல ‘ #The_Nation_and_The_World என்ற பத்திரிக்கையையும் நடத்தினார் . அவர் தமிழர்களின் சிறந்த முன்னோடிகளில் ஒருவர். மிகச்சிறந்த ஆளுமை .
அவர் உருவாக்கிய கல்லூரியில் படித்த நீங்கள், இன்று வாழ்க்கை தரம் உயர்ந்து, பொருளாதார மேன்மை அடைந்து சிங்கப்பூரில் வசிக்கிறீர்கள் .
இந்த புனித ரமலானின் அவருக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள். இந்த அமைப்பில் எல்லா மதத்தினரும், சாதியினரும் உள்ளனர். இந்த ஒற்றுமையைத்தான் சிங்கப்பூர் அரசு கடைப்பிடிக்கிறது. சிங்கப்பூர் அரசின் சட்டங்களை மதித்து வாழும் சிறந்த குடிமக்களாக திகழ உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .
இவ்வாறு பேசினார். அவருக்கு #Alumini ,சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிங்கப்பூருக்கான இலங்கையின் துணைத்தூதர் #அமீர்_அஜ்வத், ஜாமியா சமூக சேவை அமைப்பின் துணைத்தலைவர் #அப்துல்_மாலிக் , ஜாமியா குழுமத்தை சேர்ந்த #டாக்டர்_சலீம் , #BSA அவர்களின் மூன்றாவது மகனும் , பிரபல தொழில் அதிபருமான #அகமது_புஹாரி , சமூக ஆர்வலர்கள் #ஜஹாங்கீர் , #பரியுல்லாஹ் , டாக்டர்.தீன் , நாகூர் கௌஸ் , #MKP யை சேர்ந்த #அன்பு_அக்பர் , #நௌதா , #நாகூர்_செய்யது_அலி , #தோப்புத்துறை_தமிம் , #திட்டச்சேரி_ஹாஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
அழைப்பிதழ் கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தகவல்;
#தகவல்_தொழில்நுட்ப_அணி #சிங்கப்பூர்
19.05.2018