சிங்கப்பூர்.மே.20., சிங்கப்பூரில் மூத்த அமைப்பான ‘ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம்’ சார்பில் இன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது…!
இயற்கை சூழ , மிகப் பழைமையான பள்ளிவாசலான ‘உமர் சல்மா’ மஸ்ஜிதை தேர்வு செய்து அங்கே நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்வில், சிங்கப்பூரின் கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜனாப் முகம்மது பைசல் இப்ராஹிம் அவர்களும், 8 நாடுகளை சேர்ந்த தூதர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களுடன் ‘UIMA’ அமைப்பின் அழைப்பை ஏற்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களும் பங்கேற்றார்.
இந்த அமைப்பு, முன்னாள் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும், சிங்கையின் தந்தையான லீ-குவான்-யூ அவர்களின் நண்பருமான, நாகூர் வம்சாவளியை சேர்ந்த, காலம் சென்ற #ஜனாப்_அப்துல்_ஜப்பார் அவர்கள் முன்னின்று உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் வீசும் இனிய திறந்தவெளி சூழலில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்வில், வசதி குறைந்தவர்களுக்கு ரமலான் அன்பளிப்பு பைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சங்கத்தலைவர் பரியுல்லாஹ், சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சமூக ஆர்வலர் ஜஹாங்கீர், #UIMA அமைப்பின் CEO ஹாஜா மெய்தீன், பிரபல தொழில் அதிபர் அகமது புஹாரி (BSA அவர்களின் மகன்), சிங்கப்பூர்-இந்திய வர்த்தக சங்க தலைவர் சந்துரு, உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகளின் தலைவர்களும், சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் பிரமுகர்களும், சீன, மலாய், இந்திய சமூகங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர் .
அங்கு வந்திருந்த இந்திய, சவுதி அரேபிய, ஐக்கிய அரபு அமீரக தூதர்களையும் #மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து உரையாடினார் .
இந்திய தூதர் அஸ்ரப் அவர்கள், ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பியும் , முஸ்லிம் இந்தியா பத்திரிக்கையின் ஆசிரியருமான காலம் சென்ற சையது சகாபுதீன் அவர்களின் மருமகன் ஆவார். அவருக்கும் தனக்குமான நட்பை எடுத்துக்கூறியதும் அஸ்ரப் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அதுபோல் #அமைச்சர்_பைசல் அவர்களும், மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களும் பரஸ்பரம் பொன்னாடை அணிவித்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.
பல்வேறு தரப்பினரும் பங்கேற்ற இந்நிகழ்வு சகோதரத்துவத்தையும் ஒற்றுமையும் இணக்கமான பண்பாட்டையும் வெளிக்காட்டுவதாக அமைந்தது .
தகவல்;
#தகவல்_தொழில்நுட்ப_அணி
(IT-WING)
#சிங்கப்பூர்
20.05.2018