மஜக மாநில பொருளாளர் குடியாத்தம் வருகை..! பிரமாண்டமாய் நடைபெற்ற மஜகவின் கொடியேற்றம் நிகழ்ச்சி..!!

வேலூர்.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் நேற்றுவேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரத்திற்கு வருகை புரிந்தார்கள்.

இவரின் வருகையையொட்டி குடியாத்தம் நகர மஜக-வினர் 100க்கும் மேற்ப்பட்டோர் வாகன பேரணியாக குடியாத்தம் வளைவிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை நகர செயலாளர் எஸ்.அனீஸ் தலைமையில் வருகை புரிந்தனர்.

இந்த வாகன பேரணியாக சென்ற பொழுது அந்த சாலை முழுவதும் வாகனங்களில் மஜகவின் கருஞ்சிவப்பு கொடிகள் மிகப் பிரமாண்டமாய் காணப்பட்டன, மஜகவினர் பேரணியாக சென்றதை பொது மக்களுக்கும், சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் எவ்வித இடையுறு இல்லாமல் மிகவும் கட்டுக் கோப்புடனும் காவல் துறை அதிகாரிகளின் பாதுகாப்போடும்
மஜக-வின் இளைஞர் பட்டாளம் தங்கள் கட்சி கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கவிருப்பதை மிகுந்த உற்சாகத்துடன் வெளிப்படுத்தினர்.

முதல்கட்டமாக குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி அலுவலகம் எதிரில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அடுத்த கட்டமாக, சித்தூர் கேட் பகுதியிலும்.,

மூன்றாம் கட்டமாக, 8 வது வார்டு, அசேன் தெருவிலும், மிக பிரமாண்டமாக, பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மஜக-வினரின் பலத்த கோஷங்களுடன் மாநில பொருளாளர் S.S.ஹாருன் ரஷீத்.M.com. அவர்கள் கொடியேற்றி வைத்தார்.

இதில் மஜக வேலூர் மே மாவட்ட துணை செயலாளர் I.S.முனவ்வர் ஷரீப், மாவட்ட பொருளாளர் S.MD.நவாஸ், இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுதீன் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞர் அணி செயலாளர் S.G.அப்சர் சையத் MBA, மாநில இளைஞர் அணி பொருளாளர் A.மன்சூர் அஹ்மத், தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப், தென் சென்னை மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கபீர் அஹ்மத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்பு நகர செயலாளர் எஸ்.அனீஸ் இல்லத்திற்கு வருகை தந்து சுன்னத் செய்திருக்கும் அவரது இரு மகன்களையும் மற்றும் குடும்பத்தினரிடமும் நலம் விசாரித்தார்.

அடுத்தபடியாக !

நகர பொருளாளர் முபாரக் இல்லத்தில் நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் சந்திப்பும் மற்றும் இரவு மாவட்ட துணை செயலாளர் இல்லத்தில் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் முன்னா (எ) நஸீர், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அன்வர் பாஷா, முன்னாள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் S.Y.ஆரிப், வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சையத் உசேன், முஜாயத், அப்ரோஸ், மற்றும் குடியாத்தம் நகர துணை செயலாளர் சலீம், நகர இளைஞர் அணி செயலாளர் முஹம்மத் கெளவுஸ், ஆம்பூர் மருத்துவ அணி ஜிபேர் அஹ்மத், கிளை செயலாளர் அல்தாப், கிளை பொருளாளர் சித்திக், கிளை துணை செயலாளர்கள் சாதிக், அலீம் கிளை மருத்துவ அணி செயலாளர் ரஹ்மான், மற்றும் முபாரக், கபீர், பிலால், அல்த்து, சலாம், அம்ஜத், தாஜ் ஆரிப், அக்பர், ஷாபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING.
#குடியாத்தம்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.