உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவுக்கு
தமிழக அரசு 10 லட்சம் ரூபாய்
ஆறுதல் நிதி வழங்க வேண்டும்!
மஜக வேண்டுகோள்!
இன்று நாகப்பட்டினத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியதாவது…
நேற்று இரவு தஞ்சை- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவரால் தாக்கப்பட்டு 3 மாத கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்தது வேதனையளிக்கிறது. அந்த காவல் ஆய்வாளரை கைது செய்தது வரவேற்க்கதக்கது. அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துயரத்தில் இருக்கும் உஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின் போது மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் சாகுல், நாகை நகர பொருளாளர் அஜிஸ் ரஹ்மான், சம்பத் குமார், சதாம், சித்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
08.03.2018.