UAE.ஜூலை.21., ஐக்கிய அரபு அமீரகம், மனிதநேய கலாச்சாரப் பேரவையின் துபை மாநகரம் சார்பாக புதிய கிளைகள் துவக்கம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி 20/07/2018 வெள்ளிகிழமை மாலை 7 மணியளவில் தேரா துபை கராச்சி தர்பார்
ஹோட்டலில் மாநகர செயலாளர் லால்பேட்டை.B.ரஹ்மத்துல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாநகர பொருளாளர் V.ஷபிக்குர் ரஹ்மான் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.அமீரக பொருளாளர் அதிரை அஷ்ரப் வரவேற்புரை நிகழ்த்தினார்.அமீரக துணை செயலாளர்கள் H.அபுல் ஹசன் மற்றும் அடியற்கை.லியாகத் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அமீரக செயலாளர் மதுக்கூர்.S.அப்துல் காதர் அவர்கள் கிளைகளின் செயல்பாடுகள் பற்றிய சிறப்பான விளக்கவுரையாற்றினார்.
இந்நிகழ்வில் சோனாப்பூர்,சத்வா,அல் நஹ்தா,டி.ஐ.பி,அல்கூஸ் உள்ளிட்ட ஐந்து புதிய கிளைகளின் துவக்கமும், தேரா மற்றும் அல்கிஸஸ் கிளைகளின் நிர்வாகமும் புனரமைக்கப்பட்டது.புதிய கிளைகளின் செயலாளர்களின் அறிமுக நிகழ்வும் நடைபெற்றது.
இறுதியாக பொதுசெயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் துபை மாநகரத்தின் சார்பாக மாதம் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி அளித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்சிக்கான சிறப்பான ஏற்பாட்டை மாநகர துணை செயலாளர்கள் S.ஹம்தான்,M.ஜெகபர் சாதிக்,அதிரை.சாகுல் ஹமீது,கட்டிமேடு.ஜாஹிர் உசேன்,காயல்பட்டினம் சபீர் அலி,லால்பேட்டை ஜாசிம் ஆகியோர் செய்திருந்தனர்.மாநகரத்தின் சார்பாக அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தகவல் :
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_wing
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை.
#துபை_மாநகரம்
#ஐக்கிய_அரபு_அமீரகம்.
20/07/2018