மார்ச்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் A.M. ஹாரிஸ் அவர்களின் புதுமனை புகுவிழா கோட்டை பட்டினத்தில் நடைபெற்றது. இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்கள் . இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பேராவூரணி.சலாம் உடனிருந்தார்.. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம் 09.03.2024.
Year:
தோப்புத்துறையில் …. KMKI CARS திறப்பு விழா… மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரி பங்கேற்பு….
மார்ச்.08., தோப்புத்துறையில் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்காக KMKI CARS என்ற ஷோரூம் திறப்பு விழா இன்று நடைப்பெற்றது. இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று உரிமையாளரும், தோப்புத்துறை வர்த்தகர் சங்க தலைவருமான K.M.K1 நவாஸ்தீன் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார். இதில் வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத் தலைவர் TRS திருமலை செந்தில், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மருத்துவர் M.சபீர் அகமது, மஜக மாவட்ட துணைச் செயலாளர் சேக் அகமதுல்லா, மற்றும் பல பிரமுகர்களும் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம் 08.03.2024.
பரங்கிப்பேட்டையில்…. ரெடிமேட் கடை திறப்பு…. மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி திறந்து வைத்தார்….
மார்ச்.08., மஜக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் ஹமீது ஜெகபர் அவர்களின் சுல்தான் எம்பயர் கடையை பரங்கிப்பேட்டையில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி திறந்து வைத்தார். கைலிகளை வாங்கி முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார் கைலிகள், வேட்டிகள், தொப்பிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இந்தோனேஷிய கைலிகளும், தொப்பிகளும் இங்கு கிடைக்கிறது. இதில் JAQH அமைப்பின் மாநில தலைவர் அப்துல்காதர் மதனி, மாணவர் இந்தியாவின் மாநிலச் செயலாளர் வக்கீல் . முஷ்ரப், மஜக மாவட்டச் செயலாளர் லால்பேட்டை ஜாகீர், அவைத் தலைவர் தைய்யூப் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம் 08.03.2024.
மகளிர் தின வாழ்த்துக்கள்! கருவில் நம்மை சுமந்தவள் தாய் எனும் ஒரு பெண் நம் கனவுகளை நிறைவேற்ற மனைவியாக துணை நிற்பவள் ஒரு பெண் பெண்கள் சமூகத்தின் கண்கள் அவர்களை கொணடாடுவது நாகரீக சமூகத்தின் கடமை. #மகளிர்தினம் | #WomensDay | #MJKParty https://x.com/ThamimunansariM/status/1765951880973418813?s=08
மஜக தலைமையகத்திற்கு… தோழர் தியாகு வருகை! தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் சந்திப்பு…..
மார்ச்.07., 'தமிழ்நாடு பொது மேடை - 2024' என்ற அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அறிவுஜீவிகள், சான்றோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்த வியூகங்கள் - விழிப்புணர்வுகள் குறித்த பார்வைகளுடன் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது நீதியரசர். அரி பரந்தாமன், இளந்தமிழகம் செந்தில், தோழர். தியாகு உள்ளிட்ட பலரும் இதில் செயலாற்றி வருகின்றார்கள். இவ்வமைப்பின் சார்பில் தோழர். தியாகு இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்து தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் உரையாடினார். நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. அப்போது மஜக மாநிலச் செயலாளர்கள் நாகை. முபாரக், நெய்வேலி - இப்ராகிம், மனிதநேய வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் வக்கீல் அமீன், மாநில துணைச் செயலாளர் வக்கீல் ஸ்வாதிஸ் ஆகியோரும் உடனிருந்தார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 07.03.2024.