You are here

மஜக தலைமையகத்திற்கு… தோழர் தியாகு வருகை! தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் சந்திப்பு…..

மார்ச்.07.,

‘தமிழ்நாடு பொது மேடை – 2024’ என்ற அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அறிவுஜீவிகள், சான்றோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்த வியூகங்கள் – விழிப்புணர்வுகள் குறித்த பார்வைகளுடன் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

நீதியரசர். அரி பரந்தாமன், இளந்தமிழகம் செந்தில், தோழர். தியாகு உள்ளிட்ட பலரும் இதில் செயலாற்றி வருகின்றார்கள்.

இவ்வமைப்பின் சார்பில் தோழர். தியாகு இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்து தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் உரையாடினார்.

நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

அப்போது மஜக மாநிலச் செயலாளர்கள் நாகை. முபாரக், நெய்வேலி – இப்ராகிம், மனிதநேய வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் வக்கீல் அமீன், மாநில துணைச் செயலாளர் வக்கீல் ஸ்வாதிஸ் ஆகியோரும் உடனிருந்தார்கள்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
07.03.2024.

Top