மார்ச்.16., இந்திய தேசிய லீக் தலைவரும், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான பஷீர் அகமது ஹாஜியார் அவர்கள் இன்று மஜக தலைமையத்திற்கு நல்லெண்ண வருகை தந்தார். தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடினார். அப்போது பொருளாளர் J.S. ரிஃபாயி, துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன், மாநிலச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும், மாநிலத் துணைச் செயலாளர் பேரா. அப்துல் சலாம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக் ஆகியோரும் உடனிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 16.03.2024.
Year:
MKP ரியாத் மண்டலத்தின் சார்பில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்வு….
மார்ச்.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை MKP ரியாத் மண்டலத்தின் சார்பாக மாபெரும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மண்டல செயலாளர் தஞ்சை முஸ்தபா அவர்களின் தலைமையில் ரியாத் மண்டலத்தின் நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற நிகழ்வை மண்டல IT WING செயலாளர் அப்துல்லாஹ் அவர்கள் தொகுத்து வழங்க மண்டல அவைத்தலைவர் ஜாஹிர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். உலகளாவிய தமிழர்கள் நலசங்கத்தின் தலைவர் சையத் மரைக்காயர் அவர்கள் வாழ்த்துரை வழங்க அடுத்தபடியாக ரியாத் தவ்ஹீத் கூட்டமைப்பின் துணை தலைவர் மவ்லவி சம்சுதீன் மன்பயி அவர்கள் நோன்பின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அயலக்தில் வாழும் தமிழர்கள் இயக்கமாக செயல்படுவதின் நன்மைகள் குறித்தும் MKP-யின் செயல் திட்டங்கள் குறித்தும் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், அதன் தலைவர் மு.தமிமுன் அன்சாரி EX MLA அவர்களின் சமுதாயத்திருக்கான பணிகள் குறித்தும், சட்டமன்றத்தில் சீரிய செயல்பாடுகள் மூலம் பெற்று தந்த நன்மைகள் குறித்தும் ரியாத் மண்டல செயலாளர் தஞ்சை முஸ்தபா அவர்கள் சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய "புயலோடு போராடும் பூக்கள்"
விருதாச்சலத்தில்…. மஜக சார்பில் CAA சட்ட எதிர்ப்பு போராட்டம்….
மார்ச்.15., மக்கள் விரோத கருப்பு சட்டங்களான CAA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்தின் சார்பில் இன்று மாவட்ட துணைச் செயலாளர் அகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் மன்சூர் கண்டன முழக்கமிட்டு போராட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். இந்த போராட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பாபர் ஒலி, இளைஞரணி மாவட்ட செயலாளர் மன்சூர், நெய்வேலி நகர செயலாளர் ஆதம் சேட், பண்ருட்டி நகர செயலாளர் காஜா, மாணவர் இந்தியா துணைச் செயலாளர் சித்தீக், நகர செயலாளர் முகமது சபியுல்லா, துணைச் செயலாளர் சையது முஸ்தபா, வர்த்தக அணி அயூப் கான், மருத்துவ சேவை அணி அப்துல் பகத், மாணவர் இந்தியா நகர செயலாளர் ரியாஸ், இளைஞர் அணி துணைச் செயலாளர் இம்ரான், வர்த்தக அணி சகாப்தீன் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்_வடக்கு_மாவட்டம் 15-03-2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு….
மனிதநேய ஜனநாயக கட்சியின், சேலம் மாவட்ட பொருளாளராக, A.K.சதாம் உசேன் த/பெ; கமால் பாஷா சங்கிலி ஆசாரி காடு, சன்னியாசி குண்டு, சேலம் .636015 அலைபேசி; 7904725128 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 14.03.2024.