மார்ச்.16.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை MKP ரியாத் மண்டலத்தின் சார்பாக மாபெரும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மண்டல செயலாளர் தஞ்சை முஸ்தபா அவர்களின் தலைமையில் ரியாத் மண்டலத்தின் நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற நிகழ்வை மண்டல IT WING செயலாளர் அப்துல்லாஹ் அவர்கள் தொகுத்து வழங்க மண்டல அவைத்தலைவர் ஜாஹிர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
உலகளாவிய தமிழர்கள் நலசங்கத்தின் தலைவர் சையத் மரைக்காயர் அவர்கள் வாழ்த்துரை வழங்க அடுத்தபடியாக ரியாத் தவ்ஹீத் கூட்டமைப்பின் துணை தலைவர் மவ்லவி சம்சுதீன் மன்பயி அவர்கள் நோன்பின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அயலக்தில் வாழும் தமிழர்கள் இயக்கமாக செயல்படுவதின் நன்மைகள் குறித்தும் MKP-யின் செயல் திட்டங்கள் குறித்தும் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், அதன் தலைவர் மு.தமிமுன் அன்சாரி EX MLA அவர்களின் சமுதாயத்திருக்கான பணிகள் குறித்தும், சட்டமன்றத்தில் சீரிய செயல்பாடுகள் மூலம் பெற்று தந்த நன்மைகள் குறித்தும் ரியாத் மண்டல செயலாளர் தஞ்சை முஸ்தபா அவர்கள் சிறப்புரையாற்றினார்
நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய “புயலோடு போராடும் பூக்கள்” நூல் கையளிக்கப்பது.
இதன் தொடர்ச்சியாக மண்டல துணை செயளாலர் தௌபீக் நன்றியுரை ஆற்றினார்
இறுதியாக சிறப்பான பல்சுவை விருந்தோடு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இனிதாக நிறைவு பெற்றது.
தகவல்;
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKPITWING
#ரியாத்_மண்டலம்
15.3.2024.