மார்ச்.29., மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (29.3.2024) சிக்னேச்சர் மஹாலில் நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ், மாண்புமிகு அமைச்சர் மெய்யநாதன் மற்றும் கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை தொகுதி பொறுப்பாளரும், மாநில துணை செயலாளருமான அ. முஹம்மது மஃரூப் பங்கேற்று பேசினார். இக்கூட்டத்தில் மயிலாடுதுறை கிழக்கு மாவட்ட செயலாளர் ஹாஜா சலீம், மேற்கு மாவட்ட செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான், லியாகத் அலி, நீடுர் மிஸ்பா, நீடுர் ஜெப்ரூதீன் தஞ்சை வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் குடந்தை ஆசாத் மற்றும் ஹ. சேக் முஹம்மது அப்துல்லாஹ், இப்ராஹீம் ஷா, ஹசேன் முஹம்மது, திருப்பனந்தால் சாதிக், பாபநாசம் அஸ்ரப் அலி, அய்யம்பேட்டை சேக் மற்றும் திரளான மஜகவினர் கலந்துகொண்டனர் தகவல்; #தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #மயிலாடுதுறை_நாடளுமன்ற_தொகுதி 29.03.2024.
Year:
இலங்கையின் புகழ் பெற்ற அறிஞர் மௌலவி A.L.M. இப்ராகிம் கஃபூரி இன்று மரணமடைந்த செய்தியறிந்து வருந்துகிறோம்..
துபாயில்… MKP சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு… மஜக துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா பங்கேற்பு…
மார்ச்.30., ஐக்கிய அரபு அமீரக மண்டலம், மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) துபாய் மாநகரம் சார்பாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி துபாய் Hor_al_anz பகுதியில் உள்ள Annaporana உணவகத்தில் நடைபெற்றது. இது மனிதநேய சொந்தங்களுக்காக நடைபெற்ற ஒன்று கூடல் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வினை துபாய் மாநகரச் செயலாளர் லால்பேட்டை V.ஷபிக்குர் ரஹ்மான் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். துபாய் மாநகர துணைச் செயலாளர் நாச்சிகுளம் யாசிர், அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் துபாய் மாநகர துணைச் செயலாளர்கள் நாச்சிகுளம் ரசீது மற்றும் சித்திக் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் K.ராவுத்தர்ஷா, மற்றும் மாநில துணைச் செயலாளர் நாட்டாமை யூசுப் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அமீரக செயலாளர் ARY அப்துல் ரெஜாக் வாழ்த்துரை வழங்கினார். மேலும் அமீரக பொருளாளர் Z.பாயஸ் அஹம்மது, அமீரக IT wing செயலாளர் தோப்பு துறை ஜியாவுல் ஹக், அமீரக வர்த்தக அணி செயலாளர் பிலால் அஹமத், அமீரக இளைஞரணி செயலாளர் வடகரை சலீம், துணைச் செயலாளர் மதுரை
கோவையில் ஒரு ஜீவ சாந்தி… உணவு வினியோகத்தை தொடங்கி வைத்தார் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி….
மார்ச்.29., கோவையில் ஜீவ சாந்தி என்ற தொண்டு அமைப்பு மனிதநேய - மத நல்லிணக்க பணிகளை முன்னெடுத்து வருகிறது. அனாதை பிணங்களை அவரவர் மத சடங்குகளின் படி அடக்கம் செய்வது, ஆம்புலன்ஸ் சேவை, ஏழைகளுக்கு உணவு வழங்குவது ஆகியன அவர்களது முக்கிய பணிகளாகும். புனித ரமலானில் சகர் நேர விடிகாலை உணவை தேவையுடையோருக்கு வழங்கும் பணியை 30 நாட்களும் திறன்பட செய்து வருகின்றனர். 200 பேர் கொண்ட தொண்டூழியர்கள், 19 குழுக்களாக பிரிந்து தினமும் 6 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார்கள். 650 கிலோ அரிசி சமைககப்பட்டு தினம் / தினம் சுவையாக விருந்து சமைக்கப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளாக செயல்படும் இவர்களுக்கு பொதுமக்கள் / வணிகர்கள் நிதியுதவி செய்கின்றனர். அவர்களின் 'அன்பாலயம் ' இல்லத்திற்கு இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்து இன்றைய சஹர் உணவு வினியோக பணியை தொடங்கி வைத்தார். பிறகு அதன் நிர்வாகிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அங்கு பல்வேறு சமூகங்களை சேர்ந்த காவல் துறை / வழக்கறிஞர் துறை / சமூக சேவை துறை / அரசுப் பணிகள் / தனியார் நிறுவனங்கள் என பலவற்றில் பணிபுரியும் பெண்கள் தன்னர்வத்துடன் பணி புரியும்
ஆம்பூரில்… மஜக சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி….
மார்ச்.29., மனிதநேய ஜனநாயக கட்சி, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரம் சார்பில் மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் M.ஜஹிருஸ் ஜமா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத், மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.விஸ்வநாதன் MLA., ஆகியோர் பங்கேற்றனர். இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். மேலும் மஜக மாவட்ட துணை செயலாளர்கள் T.R. முன்னா(எ) நஸீர், I.கலீல் பாஷா, ஊராட்சி மன்ற உறுப்பினர் S.M.ஷாநவாஸ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் R.Z ஜூபேர் அஹ்மத், MJTS மாவட்ட செயலாளர் B. முபாரக் அலி, மாவட்ட இளைஞரணி செயலாளர் H. சையத் வசிம், ஆம்பூர் நகர செயலாளர் A. ஜீஷான் பாஷா, ஆம்பூர் நகர பொருளாளர் டிஷ் நாசிர் அஹ்மத் அலீம் மற்றும் மஜக ஆம்பூர் நகர துணைச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள், ஜமாத்தார்கள் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என 500-க்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருப்பத்தூர்_மாவட்டம் 28.03.2024.