(மஜக பிரதிநிதிகள் சங்கமம் 28, பிப்ரவரி - 2023 டைமண்ட் மஹால் வளாகம் தஞ்சாவூர். கலைஞர். மு.கருணாநிதி அரங்கம் .. கோவை.நாசர் மேடை.. வாணியம்பாடி. வசீம் அக்ரம் நுழைவு வாயில் ... கீழக்கரை. அப்துல் சமது விருந்தோம்பல் வளாகம்...) மனிதநேய ஜனநாயக கட்சியின் எட்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மஜக பிரதிநிதிகள் சங்கமம் , நிகழ்ச்சி பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் 725 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள 2000 அதிகமானோர் பங்கேற்றனர். இதில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் பின்வருமாறு... 1. தேசத்தை காப்போம் இந்தியாவின் ஜனநாயகத்தையும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற அரசு அமைப்புகளையும், நீதிமன்ற சுதந்திரத்தையும் பாழ்படுத்தும் ஒன்றிய அரசின் போக்குகளும், அதற்கு மதவாத சக்திகள் துணை நிற்பதும் நாட்டின் எதிர்காலத்திற்கு பேராபத்தை உருவாக்குகிறது. தேசத்தை காப்பாற்றும் கடமை ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் இருக்கிறது என்பதால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமூகநீதி, மதச்சார்பின்மை, தேச நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என இக்கூட்டம் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது. 2. இட ஒதுக்கீடு தற்போது தமிழக அரசால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5%
Month:
நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் #தஞ்சை_தெற்கு மாவட்ட #மகளிர்_அணி நிர்வாகிகள் நியமனம். மகளிர் அணி மாவட்ட செயலாளராக N.பரக்கத் நிஷா. ஆலிமா w/o.நூருல் அமீன் சேதுபாவாசத்திரம். மாவட்ட துணை செயலாளராக S.ஜரினா அம்மாள் W/0.அப்துல் சலீம் தஞ்சை தெற்கு மாவட்டம். ஆகியோர் நியமனம் செய்ய படுகின்றனர். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 25.02.2023
நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வந்த P.M.பஷிர் அஹமது ( அலைபேசி; 98400 66244 ) அவர்கள் மாவட்டத்தின் பொருளாளராக நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 22.02.2023
நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை மாநகர் மாவட்டத்தின் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர், MH. அப்பாஸ் அலைபேசி: 9585526684 மாவட்ட பொருளாளர், M.சுலைமான் அலைபேசி: 9442007041 மாவட்ட துணை செயலாளர்கள், 1) H.M.முஹம்மது ஹனீப் அலைபேசி :9360533469 2) A.S. ஜாபர் சாதிக் அலைபேசி :9363125885 3) A. அன்வர் பாஷா அலைபேசி :8610650879 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 20.02.2023
நாகை சட்டமன்ற உறுப்பினருடன் மஜகவினர் சந்திப்பு..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் "மக்களுடன் மஜக" என்ற திட்டத்தின் கீழ் பொது மக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக நாகை மஜக மாவட்ட துணை செயலாளர் பேபி ஷாப் (எ) பகுருதீன் அவர்கள் தலைமையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் அவர்களை சந்தித்து மஜக நிர்வாகிகள் மனு அளித்தனர்... இச்சந்திப்பில் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் முதல் வகுப்பரை கட்டிடங்கள் வரை பவர் பிளாக் (paver Block) அமைத்து தரும்படியும் கீழசன்னாநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சத்துணவு கூடம் அமைத்து தர வேண்டியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து கோரிக்கை மனுவை மஜகவினர் அளித்தனர். பிறகு பொதுச்செயலாளர் எழுதிய "புயலோடு போராடும் பூக்கள்" என்ற நூலை சட்டமன்ற உறுப்பினருக்கு மஜக-வினர் அன்பளிப்பாக வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் பாலமுரளி, MJTS மாவட்ட செயலாளர் முத்து, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் அப்துல் மாலிக் உடனிருந்தனர்.