மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொது மக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக நாகை மஜக மாவட்ட துணை செயலாளர் பேபி ஷாப் (எ) பகுருதீன் அவர்கள் தலைமையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் அவர்களை சந்தித்து மஜக நிர்வாகிகள் மனு அளித்தனர்…
இச்சந்திப்பில் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் முதல் வகுப்பரை கட்டிடங்கள் வரை பவர் பிளாக் (paver Block) அமைத்து தரும்படியும் கீழசன்னாநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சத்துணவு கூடம் அமைத்து தர வேண்டியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து கோரிக்கை மனுவை மஜகவினர் அளித்தனர்.
பிறகு பொதுச்செயலாளர் எழுதிய “புயலோடு போராடும் பூக்கள்” என்ற நூலை சட்டமன்ற உறுப்பினருக்கு மஜக-வினர் அன்பளிப்பாக வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் பாலமுரளி, MJTS மாவட்ட செயலாளர் முத்து, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் அப்துல் மாலிக் உடனிருந்தனர்.