ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ்நாடு வாழ் மக்களுக்கு மத்தியில் மனிதநேய கலாச்சார பேரவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு அல்அய்ன் மாநகர நிர்வாகம் சேவை பணியில் தொடர்ந்து முன்னிலை பெற்று இருக்கிறது. மஜக பொதுசெயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் குவைத் வருகையை தொடர்ந்து, 3 நாள் பயணமாக அமீரகம் வருகை தந்துள்ளார். அதனை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக மண்டலத்தின் செயற்குழுவில் பங்கேற்று நிர்வாகிகளை சந்தித்தார். இதனிடையே அல்அய்ன் மாநகர நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று இங்கு வருகை தந்தார். அப்போது அல்அய்ன் மாநகர நிர்வாகிகளுடன் 'இன்றைய தமிழகம்' என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு மாநகர செயலாளர் S.முகம்மது இம்ரான் அவர்கள் தலைமையேற்றார். மாநகர பொருளாளர் M.அப்துல் நாசர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். அமீரக மண்டல செயலாளர் டாக்டர் அசாலி அஹமது அவர்கள் முன்னுரை வழங்கி பேசினார். பிறகு பொதுசெயாலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்துரையாடலை வழிநடத்தினார். நிறைவாக மாநகர துணை செயலாளர் N.M.ஃபஜ்லுல் ஹக் அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்தியன் அயோசியேன் சென்டர் தலைவர் M.முபாரக் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அமீரக மண்டல ஒருங்கிணைப்பாளர் J.சேக்தாவுது மற்றும் துணை செயலாளர்கள் A.ஜாகிர் உசேன், Y.M.ஜியாவுல் ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அல் அய்ன்
Month:
கால்களை இழந்த ஆட்டோ தொழிலாளரை நேரில் சந்தித்து உதவிய… மஜக தொழிற்சங்கத்தினர்….!
சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாதவன் இரத்த குழாய் அடைப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய் தீவிரத்தை தடுக்க இரண்டு கால்களை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அறுவை சிகிச்சை முடிந்து அடுத்தகட்ட சிகிச்சைக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். முன்னதாக அறுவை சிகிச்சையின் போது மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தினர் 5-யூனிட் அவசர கால இரத்த தானம் செய்தனர். இன்று அவரை மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான், மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் மாத்தூர் இப்ராஹிம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் மருத்துவமனை அலுவலர் அவர்களை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சை குறித்த தகவல்களை கேட்டறிந்தனர். ஆட்டோ ஓட்டுநர் மாதவன் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் சார்பாக முதல் கட்டமாக பொருளாதார உதவி வழங்கப்பட்டது. அப்போது மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தை சேர்ந்த வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தாஜுதீன், வடசென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
துபையில் அமீரக MKP ஒன்றுகூடல்… மஜக பொதுசெயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…
ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்வி வழிகாட்டல், வேலைவய்ப்பு உதவிகள், மருத்துவ சேவை, நல்லிணக்க நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மனிதநேய கலாச்சார பேரவை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதற்காக தஞ்சையில் நடைப்பெற்ற 'மஜக பிரதிநிதிகள் சங்கமம்' நிகழ்ச்சியில் அவர்களுக்கு விருதளித்து சிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே 'குவைத் மறுமலர்ச்சி மாநாட்டில்' பங்கெடுத்து விட்டு துபாய் வருகை தந்த மஜக பொதுசெயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், அமீரக மண்டல MKP நிர்வாகிகளின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துபை அண்ணப்பூர்ணா உணவக மாடியில் இந்நிகழ்வு நடைபெற்றது. ஒரு நாள் ஏற்பாட்டில் நிர்வாகிகள் ஒன்று கூடியது குறிப்பிடத்தக்கது, இந்நிகழ்வில் பேசிய பொதுச்செயலாளர் அவர்கள், அமீரகத்தில் வாழும் தமிழ்நாட்டு மக்களிடையே MKP ஆற்றிவரும் பணிகளுக்கு தமது வாழ்த்துகளை கூறினார். மேலும் இந்திய தூதரகத்துடன் இணைந்து பல்வேறு அறப்பணிகளை முன்னெடுக்க திட்டங்களை வகுக்குமாறும் கேட்டுக் கொண்டார். இதில் துபை, அபுதாபி, அல்அய்ன், சார்ஜா மாநகர நிர்வாகிகளும் பங்கேற்றனர். எதிர்வரும் ரமலானில் ஒவ்வொரு மாநகரமும் 'இப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி' களை நடத்துவது என்றும், அதில் இந்திய சமூக பிரமுகர்களையும், தமிழக அன்பர்களையும் அழைப்பது என்றும் முடிவெடுத்தனர். இந்நிகழ்வுக்கு அமீரக மண்டல செயலாளர் டாக்டர். அசாலி அஹமது தலைமை ஏற்றார். மண்டல பொருளாளர்
முத்துப்பேட்டை… தர்ஹா தலைவர் பாக்கர் அலியுடன் மஜக துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் சந்திப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் துனைப் பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் முத்துப்பேட்டை ஜம்புவானோடை தர்ஹா அறங்காவலர் குழு தலைவர் ஜனாப் S.S.பாக்கர் அலி ஷாஹிப் அவர்களை அவர் இல்லத்தில் மறியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது மஜக-வின் 8-ஆம் ஆண்டு துவக்கத்திற்கு வாழ்த்துகளை கூறிய அவர் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், சமூக பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடினார். மஜக-வின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்துவரும் அவர், அவ்வப்போது அலைபேசி வாயிலாக துனைப் பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களை தொடர்புகொண்டு சமுதாய கோரிக்கைகள் சிலவற்றை கூறி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்வார். தற்போதைய சூழலில், தொடர்ந்து மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் வீரியமுடன் மஜக செயல்பட வேண்டும் என்றார். சமீபத்தில் சிலரின் வலைதள பதிவுகள் குறித்து கவலையுடன் பேசிய அவர், சகோதரர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு தனி பாதுகாப்பு (PSO) ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். மு.தமிமுன் அன்சாரி தலைமையில் தொடர்ந்து இன்னும் வீரியமுடன் நீங்கள் எல்லாம் பணியாற்ற இறைவனை பிரார்த்திப்பதாக கூறி வாழ்த்தினார். இச்சந்திப்பின் போது மஜக-வின் MJVS திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜான் முகம்மது அவர்களும்,
தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட துணைச் செயலாளராக, N.ஜலாலுதீன் No.3/177 கிடாரிப்பட்டி, மேலூர் (t.k) அலைபேசி; 7395894202. தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளராக, J. ஆசிப் அஹமத் No.3/177 கிடாரிபட்டி, மேலூர். அலைபேசி; 8300835122 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.