ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்வி வழிகாட்டல், வேலைவய்ப்பு உதவிகள், மருத்துவ சேவை, நல்லிணக்க நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மனிதநேய கலாச்சார பேரவை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இதற்காக தஞ்சையில் நடைப்பெற்ற ‘மஜக பிரதிநிதிகள் சங்கமம்’ நிகழ்ச்சியில் அவர்களுக்கு விருதளித்து சிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே ‘குவைத் மறுமலர்ச்சி மாநாட்டில்’ பங்கெடுத்து விட்டு துபாய் வருகை தந்த மஜக பொதுசெயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், அமீரக மண்டல MKP நிர்வாகிகளின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
துபை அண்ணப்பூர்ணா உணவக மாடியில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ஒரு நாள் ஏற்பாட்டில் நிர்வாகிகள் ஒன்று கூடியது குறிப்பிடத்தக்கது,
இந்நிகழ்வில் பேசிய பொதுச்செயலாளர் அவர்கள், அமீரகத்தில் வாழும் தமிழ்நாட்டு மக்களிடையே MKP ஆற்றிவரும் பணிகளுக்கு தமது வாழ்த்துகளை கூறினார்.
மேலும் இந்திய தூதரகத்துடன் இணைந்து பல்வேறு அறப்பணிகளை முன்னெடுக்க திட்டங்களை வகுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதில் துபை, அபுதாபி, அல்அய்ன், சார்ஜா மாநகர நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
எதிர்வரும் ரமலானில் ஒவ்வொரு மாநகரமும் ‘இப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி’ களை நடத்துவது என்றும், அதில் இந்திய சமூக பிரமுகர்களையும், தமிழக அன்பர்களையும் அழைப்பது என்றும் முடிவெடுத்தனர்.
இந்நிகழ்வுக்கு அமீரக மண்டல செயலாளர் டாக்டர். அசாலி அஹமது தலைமை ஏற்றார். மண்டல பொருளாளர் அபுல் ஹசன் நன்றி கூறினார்.
இதில் அமீரக மண்டல ஆலோசகர்கள் மதுக்கூர் அப்துல் காதர், சேக்தாவுது, மண்டல துணை செயலாளர்கள் முகம்மது தையுப், முஹமது யூசுப் ஜியாவுல் ஹக், நிர்வாக குழு உறுப்பினர் ஜாகிர் உசேன், அபுதாபி மாநகர செயலாளர் ரசூல் முகம்மது, துணை செயலாளர் ஹக்கீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.