கால்களை இழந்த ஆட்டோ தொழிலாளரை நேரில் சந்தித்து உதவிய… மஜக தொழிற்சங்கத்தினர்….!

சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாதவன் இரத்த குழாய் அடைப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோய் தீவிரத்தை தடுக்க இரண்டு கால்களை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அறுவை சிகிச்சை முடிந்து அடுத்தகட்ட சிகிச்சைக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

முன்னதாக அறுவை சிகிச்சையின் போது மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தினர் 5-யூனிட் அவசர கால இரத்த தானம் செய்தனர்.

இன்று அவரை மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான், மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் மாத்தூர் இப்ராஹிம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் மருத்துவமனை அலுவலர் அவர்களை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சை குறித்த தகவல்களை கேட்டறிந்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் மாதவன் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் சார்பாக முதல் கட்டமாக பொருளாதார உதவி வழங்கப்பட்டது.

அப்போது மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தை சேர்ந்த வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தாஜுதீன், வடசென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.