அல்அய்ன் MKP ஒற்றுகூடல்… மஜக பொதுசெயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…

ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ்நாடு வாழ் மக்களுக்கு மத்தியில் மனிதநேய கலாச்சார பேரவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இங்கு அல்அய்ன் மாநகர நிர்வாகம் சேவை பணியில் தொடர்ந்து முன்னிலை பெற்று இருக்கிறது.

மஜக பொதுசெயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் குவைத் வருகையை தொடர்ந்து, 3 நாள் பயணமாக அமீரகம் வருகை தந்துள்ளார்.

அதனை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக மண்டலத்தின் செயற்குழுவில் பங்கேற்று நிர்வாகிகளை சந்தித்தார்.

இதனிடையே அல்அய்ன் மாநகர நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று இங்கு வருகை தந்தார்.

அப்போது அல்அய்ன் மாநகர நிர்வாகிகளுடன் ‘இன்றைய தமிழகம்’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு மாநகர செயலாளர்
S.முகம்மது இம்ரான் அவர்கள் தலைமையேற்றார்.

மாநகர பொருளாளர் M.அப்துல் நாசர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

அமீரக மண்டல செயலாளர் டாக்டர் அசாலி அஹமது அவர்கள் முன்னுரை வழங்கி பேசினார்.

பிறகு பொதுசெயாலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்துரையாடலை வழிநடத்தினார்.

நிறைவாக மாநகர துணை செயலாளர் N.M.ஃபஜ்லுல் ஹக் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்தியன் அயோசியேன் சென்டர் தலைவர் M.முபாரக் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

அமீரக மண்டல ஒருங்கிணைப்பாளர் J.சேக்தாவுது மற்றும் துணை செயலாளர்கள் A.ஜாகிர் உசேன், Y.M.ஜியாவுல் ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அல் அய்ன் மாநகர துணை செயலாளர் M.செய்யது முகம்மது, ஆலோசகர்கள்
A.அபுபக்கர், P.முகமது சேட், A.முகம்மது மரைக்காயர், மருத்துவ அணி செயலாளர் N.தாவுது யாசர் அராஃபத் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.