மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் இன்று திருச்சியில் ஹோட்டல் பேலசில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.. இதில் அவைத்தலைவர் மன்னை செல்லச்சாமி, இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ, துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன், மாநில செயலாளர்கள் நாகை முபாரக், கோவை M.H.ஜாபர் அலி, பல்லாவரம் ஷஃபி ஆகியோர் பங்கேற்றனர் மேலும் மாநில துணை செயலாளர்கள் பாபு ஷாஹின்ஷா, நெய்வேலி இப்ராஹிம், துரை முகம்மது, அஹமது கபீர், பேராவூரணி சலாம், அஸாருதீன், ஜாவித் ஜாபர், ஹாரீஸ், MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாம்பரம் தாரிக், ஆகியோரும் இதில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது... 1) கடந்த 07.02.2023 அன்று 37 மாவட்டங்களின் எழுத்துப்பூர்வ பரிந்துரைக்கு பின்பு, சிறப்பு நிர்வாகக் குழு ஒத்துழைப்புடன், தலைமை நிர்வாக குழுவால் இறுதி செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள், கட்சியின் பெயரை பயன்படுத்தி, கட்சிக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் யாவரும் குடும்ப சொந்தங்களாக பயணிக்கும் எமது சமூக நீதி பயணத்தை எவராலும்
Month:
தஞ்சையில் மஜக_8-ஆம் ஆண்டு தொடக்க விழா… மஜக பிரதிநிதிகள் சங்கமம்…
இன்று திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. அதில் மஜக-வின் எட்டாம் ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மஜக-வின் கிளை முதல் மாநிலம் வரையிலான அனைத்து மட்ட நிர்வாகிகளும் பங்கேற்கும் வகையில் "மஜக பிரதிநிதிகள் சங்கமம்" நிகழ்ச்சியை தஞ்சாவூரில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு வெளியே வெளிநாடுகளில் செயல்படும் நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி கொடியேற்றம், கட்சியின் சாதனைகள் மற்றும் சேவைகளை வெளிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, ஆவணப்பட திரையிடல், பிரபல ஆளுமைகளின் உரைவீச்சு, விருது வழங்குதல், இளைஞர்- மாணவர் அரங்கு, கலை நிகழ்ச்சி என பன்முக தன்மைகளோடு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட உள்ளன. பெண் நிர்வாகிகளுக்கு சிறப்பு பகுதியும் ஏற்பாடு செய்ய உள்ளதும் குறிப்பிடத்தக்கது. "தஞ்சையில் திரள்வோம்; தன்னுரிமை காப்போம்" என்ற முழக்கம் இதற்காக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் கட்சி செயல்படுகிறது. அவைத் தலைவர் மன்னை செல்லச்சாமி அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியில் கோஷ்டிகளை உருவாக்கும் நோக்குடனும், கட்சியை பிளவுபடுத்தும் வகையிலும், கட்சியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறிடும் வகையிலும் செயல்பட்ட காரணத்தினால் கடந்த 07.02.2023 அன்று கட்சியில் பொருளாளராக செயல்பட்டு வந்த ஹாருன் ரசீத், அவைத் தலைவராக செயல்பட்டு வந்த நாசர் உமரி, ஆகியோர் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதற்கு 40 மாவட்டங்கள் எழுத்துப்பூர்வ பரிந்துரை செய்துள்ளனர். சிறப்பு நிர்வாக குழுவில் விவாதிக்கப்பட்டு, தலைமை நிர்வாக குழுவில் உறுதி செய்யப்பட்டது. கட்சியின் பைலா (அமைப்பு விதி) விதி எண் 48 உட்பிரிவு 4-ன் படி, கட்சியிலிருந்து நடவடிக்கைக்கு ஆளானவர்கள் எவரும் கட்சியின் பெயரையோ, கொடியையோ எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது. நேற்று (18.02.2023) திண்டுக்கலில் கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் அங்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பேனரை அவர்கள் பயன்படுத்தியதை அறிந்து, அதை காவல்துறை அகற்றி இருக்கிறது. அப்படி நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியிலிருந்து பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை நீக்கியதாக ஊடகங்களுக்கு செய்தி கொடுத்திருக்கிறார்கள். அதை வன்மையாக இந்த சிறப்பு நிர்வாக குழு கண்டிக்கிறது. கட்சியில் நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள்
தலைமையக அறிவிப்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கிழக்கு, மேற்கு என பிரிக்கப்படுகிறது. தற்போதைய நிர்வாகம் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டமாக செயல்படும். இதில் இராமநாதபுரம், திருவாடனை சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறும். பிற தொகுதிகள் மேற்கு மாவட்டத்தில் இடம் பெறும். ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவராக மீசல் செய்யது கனி (9025764169)அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18.02.2023
தலைமையகத்தில்…. செங்கை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகீர் தலைமையில் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி-28 கட்சியின் 8-ம் ஆண்டு துவக்க நிகழ்வை முன்னிட்டு மாவட்டத்தில் கொடியேற்று நிகழ்வுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் உடன் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணை செயலாளர் அஸாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தாரிக், இளைஞரணி பொருளாளர் முகமது பைசல், ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் பாலவாக்கம் காதர், இளைஞரணி செயலாளர் பைசுல்லாஹ், இளைஞரணி துணை செயலாளர் அஸ்ரப், மற்றும் ஷானவாஸ், முஸ்தாக், ஷாம், ஷேக்மீரான், ஹபீப் ரஜ்மான் உள்ளிட்ட மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.