தலைமையகத்தில்…. செங்கை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகீர் தலைமையில் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி-28 கட்சியின் 8-ம் ஆண்டு துவக்க நிகழ்வை முன்னிட்டு மாவட்டத்தில் கொடியேற்று நிகழ்வுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

பொதுச் செயலாளர் உடன் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணை செயலாளர் அஸாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தாரிக், இளைஞரணி பொருளாளர் முகமது பைசல், ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் பாலவாக்கம் காதர், இளைஞரணி செயலாளர் பைசுல்லாஹ், இளைஞரணி துணை செயலாளர் அஸ்ரப், மற்றும் ஷானவாஸ், முஸ்தாக், ஷாம், ஷேக்மீரான், ஹபீப் ரஜ்மான் உள்ளிட்ட மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.