கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், ஆகியோர் பங்கேற்று ரயில் நிலைய முற்றுகை போராட்டம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை 17.6.2022 அன்று நபிகளார் அவர்களைக் குறித்து அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், உத்தரபிரதேசத்தில் அதற்காக குரல் கொடுத்த மக்களின் வீடுகளை இடித்த பாசிச பாஜக அரசை கண்டித்தும் இரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR. பதுருதீன், சிங்கை சுலைமான், ஹனிஃபா, ஜாபர் சாதிக் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Month:
கூடங்குளம் அணுஉலை பூங்கா அனுகழிவு மைய எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக அனைத்து கட்சி கூட்டம்..!
கூடங்குளம் அணுஉலை பூங்கா - அனுகழிவு மைய எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக நெல்லையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் சு.ப.உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம், மருத்துவ சேவை அணி செயலாளர் சம்சு ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் ‘அணுஉலைக்கு அகலே’ (Away From Reactor) எனும் அணுக்கழிவு மையங்களும், அணுக்கழிவு மறுசுழற்சி ஆலையும் (reprocessing plant) அமைக்கும் நடவடிக்கைகளில் அணுசக்தித்துறை மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. இது அணுஉலைகளைவிட ஆபத்தானது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2014-ஆம் ஆண்டு இறுதி வரை கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டத்திற்கு எதிராக நெல்லை மாவட்ட மக்கள் மாபெரும் அறவழிப் போராட்டங்களை நடத்தினர். போராடிய மக்களின் உணர்வுகளை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் 5-வது மற்றும் 6-வது அணு உலைகளுக்கு முதல் காங்கிரீட் போட்டு (First Pour of Concrete) அவற்றை நிறுவுவதற்குமான நடவடிக்கைகளிலும் அணுசக்தித்துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இதற்கிடையே முதலிரண்டு அணுஉலைகளுக்கான AFR அணுக்கழிவு மையங்கள் கட்டுவதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் ஒன்றை
சிறந்த இரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழ் பெற்ற குடியாத்தம் மஜக! குடியாத்தம் முதன்மை மருத்துவர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!
ஜீன்:15., வேலூர் மாவட்ட குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பில் தொடர்ந்து மருத்துவ உதவிகளும் அவசர கால இரத்ததான சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து வேலூர் மாவட்ட குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக குருதி கொடையாளர் தினம் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் சிறந்த இரத்ததான சேவைக்கான சான்றிதழை மனிதநேய ஜனநாயக கட்சிக்கு முதன்மை மருத்துவர் திரு.மாறன் பாபு அவர்கள் வழங்கி பாராட்டினார். சான்றிதழை மனிதநேய ஜனநாயக கட்சி நகர செயலாளர் எஸ்.அனீஸ், அவர்கள் பெற்றுக் கொண்டார் இதில் நகர மருத்துவ சேவை அணி செயலாளர் சாதிக்,பொருளாளர் ரஹ்மான், மற்றும் சாபீர் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 15.06.2022
சங்கராபுரம் நகர நிர்வாகி யாசீன் திருமணம்…! மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது வாழ்த்து…!!
திருப்பத்தூர்.ஜூன்.14., கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர நிர்வாகி யாசீன் அவர்களின் திருமண விழா திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இத்திருமண விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜஹிருஸ் ஜமா, மாவட்ட துணைச் செயலாளர் ஷாநவாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அக்மல், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.. தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பத்தூர்_மாவட்டம்
நாகர்கோவிலில்!! MJTS சார்பில் ஆட்டோ நிறுத்தம் திறப்பு விழா!!
ஜூன்:13., கன்னியாகுமரி மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTS சார்பில் நாகர் கோவிலில் புதிய ஆட்டோ நிறுத்தம் திறப்பு விழா நிகழ்ச்சி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முகமது ராபி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணைச் செயலாளர் அமீர்கான், மாநகரச் செயலாளர் மாகீன் இப்ராகிம், மாநகர பொருளாளர் ஐயப்பன், மாநகர துணை செயலாளர் செய்யது முகம்மது, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் காயல் A.R.சாகுல் ஹமீது அவர்கள் பங்கேற்று தொழிற்சங்க கொடியேற்றி புதிய ஆட்டோ நிறுத்தத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், பாத்திமா நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஹிமாம் பாதுஷா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட, பகுதி, கிளை கழக நிர்வாகிகள், மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் தொழிற்சங்க நகரச் செயலாளர் சேக் முகமது,