You are here

சிறந்த இரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழ் பெற்ற குடியாத்தம் மஜக! குடியாத்தம் முதன்மை மருத்துவர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!

ஜீன்:15., வேலூர் மாவட்ட குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பில் தொடர்ந்து மருத்துவ உதவிகளும் அவசர கால இரத்ததான சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது.

அதை தொடர்ந்து வேலூர் மாவட்ட குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக குருதி கொடையாளர் தினம் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் சிறந்த இரத்ததான சேவைக்கான சான்றிதழை மனிதநேய ஜனநாயக கட்சிக்கு முதன்மை மருத்துவர் திரு.மாறன் பாபு அவர்கள் வழங்கி பாராட்டினார்.

சான்றிதழை மனிதநேய ஜனநாயக கட்சி நகர செயலாளர் எஸ்.அனீஸ், அவர்கள் பெற்றுக் கொண்டார்

இதில் நகர மருத்துவ சேவை அணி செயலாளர் சாதிக்,பொருளாளர் ரஹ்மான், மற்றும் சாபீர் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
15.06.2022

Top