June:22., இறைத்தூதர் " நபிகள் நாயகத்தை"அவதூறு பேசிய பாஜக நிர்வாகிகளை கைது செய்ய கோரியும், புல்டோசர் கலாச்சாரம் எனும் பாஜக வின் அரச பயங்கரவாதத்தை கண்டித்தும். திருப்பூர் வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட துணை செயலாளர் ஷேக் ஒளி, அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞரணி மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப் , வரவேற்புரை நிகழ்த்தினார். மஜக மாவட்ட செயலாளர் B.A. மஜீத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் துரை வளவன், கொங்கு இளைஞர் பேரவையின் மாநகர செயலாளர் துரை தண்டபாணி, அல் அன்சார் நற்பணி மன்ற நிறுவனர் ஹாஃபிழ் கலந்தர், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவனர் அ.சு பவுத்தன், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் மங்கலம் காதர், மற்றும் ராயல் பாட்ஷா, முகமது உசேன், பாட்ஷா, மற்றும் நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். மாவட்ட துணைச் செயலாளர் சாதிக், நன்றியுரை நிகழ்த்தினார். தகவல்: #மஜக_தகவல_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருப்பூர்_வடக்கு_மாவட்டம் 21.06.2022
Month:
திருமருகல் ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் மஜக தனித்து போட்டி !! மஜக திருமருகல் ஆலோசனை கூட்டத்தில் முடிவு !!
ஜீன் 21, மனிதநேய ஜனநாயக கட்சியின் திருமருகல் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும், வருகின்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் விளக்கினார். இதில் ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் மற்றும் ஆதலையூர் ஊராட்சி 9வது வார்டில் மஜக சார்பாக தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.. இதில் மாவட்ட அணி நிர்வாகிகள் பகுருதீன், முத்து, ஒன்றிய நிர்வாகிகள் பாவா,மாலிக் ஹலியுல்லாஹ், பைசல், சாஜித் ஆகியோர் கலந்து கொண்டனர் . தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING நாகை_மாவட்டம் 21.06.2022
தூத்துக்குடியில்!! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் முழு மதிப்பெண் பெற்ற மாணவி!! மஜக வினர் நேரில் சந்தித்து வாழ்த்து!!
தூத்துக்குடி ஜூன்:21 நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் நேற்றைய தினம் வெளியானது இதில் தூத்துக்குடி மாவட்டம் குருகாட்டூரை சேர்ந்த துர்கா, என்ற மாணவி தமிழ்மொழி பாடத்தில் முழு மதிப்பெண் நூற்றுக்கு நூறு பெற்று தேர்ச்சி பெற்றார். தமிழகம் தழுவிய அளவில் முழு மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது, இவரது தந்தை செல்வகுமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முகமது நஜீப், அவர்கள் தலைமையில் மஜக நிர்வாகிகள் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். மேலும் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அந்த மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் மீராசாஹிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகம்மது சபிர், காயல் நகர செயலாளர் இப்னுமாஜா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் முஜிபுர் ரகுமான், ஆகியோர் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம் 21-06-2022
நுபுர் சர்மாவை கைது செய்…! கடலூர் வடக்கு மஜக சார்பில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம்! மாநிலச் துனைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கண்டன உரை !
ஜூன்; 21., நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசிய பாஜகவின் நிர்வாகிகள் நுபுர் சர்மா, மற்றும் நவீன் ஜிண்டால், ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும், அதற்காக குரல் கொடுத்த உத்திரப்பிரதேச மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்த பாசிச பாஜக அரசை கண்டித்தும். கடலூர் வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கடலூர் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர் A.மன்சூர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. போராட்டத்தில் மஜக மாநில துனைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் திருமார்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் O.A.நூர் முஹம்மத்,மாவட்ட பொருளாளர் A.ரியாஸ் ரஹ்மான்,மாவட்ட துனை செயலாளர்கள் பண்ருட்டி யாசின்,முஹம்மது ரபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துனை செயலாளர் குலோப்,மக்கள் அதிகாரம் பாலு, கடலூர் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் நசுர்தீன்,மஜக நகர பொருளாளர் ஹாரூன் ரஷீத்,உமர் பாரூக் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கடலூர்_வடக்கு_மாவட்டம் 20.06.2022
வேதாரண்யத்தில் மஜக இல்ல மணவிழா! IT WING மண்டல செயலாளர் அப்துல் முபீன் மண விழாவில் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிப்பு!
ஜூன்:20., மஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டல செயலாளர் மணமகன் N.அப்துல் முபீன், அவர்களுக்கும், மணமகள் J.நிலோபர் அவர்களுக்கும் நேற்று தோப்புத் துறையில் திருமணம் நடைப்பெற்றது. திருமணத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். மஜக இணைப் பொதுச் செயலாளர் J.S.ரிபாயி அவர்கள் திருமண உரையாற்றினார். துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநிலச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். நிகழ்வில் பாடகர் தேரிழந்தூர் தாஜ்தீன் அவர்கள் 'அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே..' என்ற பாடலை பாடி பரவசப்படுத்தினார். தொடர்ந்து , மக்கள் சேவையாற்றியவர்களுக்கும், சான்றோர்களுக்கும் பாராட்டு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் இப்பகுதியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இரண்டு மருத்துவர்கள், மருத்துவ சேவை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதன்படி, வேதாரண்யம் அரசு மருத்துவமனை முதுநிலை உதவி மருத்துவர் டாக்டர் N. தனசேகரன் அவர்களுக்கும், அகஸ்தியன் பள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ராஜசேகர், அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. வேதாரண்யத்தில் 'கைத்தடி' என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வரும் தோழர்.மோகன் அவர்களுக்கும், கடந்தாண்டு