ஜூன்; 24., நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசிய பாஜகவின் நிர்வாகிகள் நுபுர் சர்மா, மற்றும் நவீன் ஜிண்டால், ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும், அதற்காக குரல் கொடுத்த உத்திரப்பிரதேச மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்த பாசிச பாஜக அரசை கண்டித்தும், அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், ஆந்திர மாநிலம் கோன சீமா மாவட்டம் அம்பேத்கர் மாவட்டமாக தொடர்ந்திட வலியுறுத்தியும். கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பி.எஸ்.என்.எல் (BSNL) அலுவலகம் முற்றுகை போராட்டம் நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் சம்சுதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சிங்கை சுலைமான், அனிபா, ஜாபர் சாதிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் MH.ஜாபர் அலி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக வெல்ஃபேர் பார்ட்டி மாநில துணைத்தலைவர் மணிமாறன், பிரெட்டர் நிட்டி இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மதி. அம்பேத்கர், விடுதலை சிறுத்தை கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் பிரபு, விசிக நகர செயலாளர் சங்கர், காங்கிரஸ் பிரமுகர் பஞ்சலிங்கம்,
Month:
ஜீன் 24, நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சின் இடை தேர்தலில் 9-வது வார்டிற்கான வேட்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் அவர்கள் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்பு மனுவை இன்று தேர்தல் நடத்தும் அலுவரிடம் வழங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன், மாவட்ட அணி நிர்வாகிகள் பதுருதீன், முத்து, நிசாத், ஒன்றிய துணை செயலாளர்கள் பாவா, ஆசிப் ஒன்றியத்துக்குட்பட்ட கிளை நிர்வாகிகள் அக்ரம், அசார், சாஜித், ஆசிக், மாலிக், ரியாஸ், ஜாசர், பைசல், இர்பான், காலித், நசிம் மற்றும் செயல்வீர்கள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #ஆதலையூர்_கிளை #நாகை_மாவட்டம் MJKITWING 24.6.2022
வேலூர் மஜக நிர்வாகிகள்… பொதுச் செயலாளருடன் சந்திப்பு…
ஜுன்.24., மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் வழியில் நள்ளிரவில் காத்திருந்து வேலூர் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்று சந்தித்து பேசினர். வேலூரில் மாவட்ட செயலாளர் முஹம்மது யாசின் தலைமையில் மஜக மாவட்ட து.செயலாளர் ஜாகீர் உசேன், சையத் உசேன், சந்தித்து கட்சி பணிகள் குறித்து கலந்துரையாடினர். அடுத்து செல்லும் வழியில் மாவட்ட பொருளாளர் I.S.முனவ்வர் ஷரீப், குடியாத்தம் நகர செயலாளர் S.அனீஸ், நகர பொருளாளர் ஷாபீர், நகர துணை செயலாளர் கவுஸ்பாஷா மற்றும் நகர நிர்வாகிகளுடன் பள்ளிக் கொண்டா அருகில் சந்தித்து உரையாடினர். அனைவரிடமும் செப் 10 அன்று நடைபெறும் சிறைவாசிகளுக்கான முற்றுகை போராட்டத்திற்கான அடிப்படை பணிகளை தொடங்கி கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார். அதை தொடர்ந்து AITI மாநில து.செயலாளர் ஆலியார் அதாவுல்லா, SDPI வேலூர் மாவட்ட பொருளாளர் SMD.நவாஸ், SDPI குடியாத்தம் தொகுதி செயலாளர் சுல்தான் ஷரீப் ஆகியோர் பொதுச்செயலாளர் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #வேலூர்_மாவட்டம் 24.06.2022
IFT நூல்கள் பரிசளிப்பு. சமரசம் ஆசிரியர் மஜக பொதுச்செயலாளரிடம் வழங்கினார்.
ஜூன்:24., பிரபல சமரசம் வார இதழின் ஆசிரியர் V.S. முகம்மது அமீன் அவர்கள் மஜக தலைமையகத்திற்கு வருகை தந்து பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து உரையாடினார். குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று ஷாகின் பாக் காத்திருப்பு போராட்டங்களை ஆவணப்படுத்தும் வகையில் தான் எழுதிய 'ஷாகின் பாக்' என்ற நாவலையும், சகோதர சமூக மக்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் 'இனிக்கும் இஸ்லாம்' என்ற நூலையும் அவர் பொதுச் செயலாளரிடம் வழங்கினார். அப்போது மாநில துணைச் செயலாளர்கள் அப்சர் சையது, அசாருதீன், மாணவர் இந்தியா மாநில செயலாளர் பஷீர் அகமது ஆகியோர் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 23.06.2022
மஜக தலைமையகத்திற்கு பேரறிவாளன் வருகை! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் சந்திப்பு!
ஜூன்:23, 31 ஆண்டு கால சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் அவர்கள், இன்று மாலை மஜக தலைமையகத்திற்கு வருகை மேற்கொண்டார். அவருடன் அவரது தாயார் அற்புதம்மாள் அவர்களும் வருகை தந்தார். கடந்த மாதம் அவர் வருகை தரவிருந்த நிலையில், அப்போது ஒத்திப்போன இச்சந்திப்பு இன்று நடைபெற்றது. பேரறிவாளன் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலையும், ஷாகின் பாக் என்ற நாவலையும் பொதுச் செயலாளர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இச்சந்திப்பில், அவரது விடுதலையில் நிகழ்ந்த பல அனுபவங்களை பேரறிவாளன் பகிர்ந்துக்கொண்டார். அவர் கூறும்போது , சட்டசபையில் உரிய நேரத்தில் தகுந்த சூழலை பயன்படுத்தி, நீங்களும், தனியரசும், கருணாசும் எடுத்த முயற்சிகள்தான், தனக்கு முதன் முதலாக பரோல் கிடைக்க வாய்ப்பாக அமைந்தது என்றும், அது பிறகு விடுதலைக்கான கட்டுடைப்பாகவும் அமைந்தது என்றும் நெகிழ்வுடன் கூறினார். தன்னைப் போன்று பாதித்தவர்களின் விடுதலைக்காக இனி உழைக்கப் போவதாகவும் கூறினார். மஜகவின் போராட்டங்களுக்கு நன்றி கூறிய அற்புதம்மாள் அவர்கள் , சென்னையில் ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக செப்டம்பர் 10 அன்று மஜக நடத்தும்