You are here

வேலூர் மஜக நிர்வாகிகள்… பொதுச் செயலாளருடன் சந்திப்பு…

ஜுன்.24.,

மஜக பொதுச் செயலாளர்
மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் வழியில் நள்ளிரவில் காத்திருந்து வேலூர் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்று சந்தித்து பேசினர்.

வேலூரில் மாவட்ட செயலாளர் முஹம்மது யாசின் தலைமையில் மஜக மாவட்ட து.செயலாளர் ஜாகீர் உசேன், சையத் உசேன், சந்தித்து கட்சி பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

அடுத்து செல்லும் வழியில் மாவட்ட பொருளாளர் I.S.முனவ்வர் ஷரீப், குடியாத்தம் நகர செயலாளர் S.அனீஸ், நகர பொருளாளர் ஷாபீர், நகர துணை செயலாளர் கவுஸ்பாஷா மற்றும் நகர நிர்வாகிகளுடன் பள்ளிக் கொண்டா அருகில் சந்தித்து உரையாடினர்.

அனைவரிடமும் செப் 10 அன்று நடைபெறும் சிறைவாசிகளுக்கான முற்றுகை போராட்டத்திற்கான அடிப்படை பணிகளை தொடங்கி கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

அதை தொடர்ந்து AITI மாநில து.செயலாளர் ஆலியார் அதாவுல்லா, SDPI வேலூர் மாவட்ட பொருளாளர் SMD.நவாஸ், SDPI குடியாத்தம் தொகுதி செயலாளர் சுல்தான் ஷரீப் ஆகியோர் பொதுச்செயலாளர் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வேலூர்_மாவட்டம்
24.06.2022

Top