ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி அரபு வளைகுடாவையும் கடந்து உலகம் எங்கும் துயரத்தோடு நோக்கப்படுகிறது. அவர் 2004, நவம்பர் 3 அன்று அமீரகத்தின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தை பொருளாதார வல்லரசாக மாற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டார். 1971-ஆம் ஆண்டு 7 நாடுகளை கொண்ட கூட்டரசாக ஐக்கிய அரபு அமீரகத்தை அவரது தந்தை மாண்புமிகு ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் கட்டமைத்தார். "மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி" என்ற முழக்கத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படுத்திய அவரது தந்தையின் வழியில், கூட்டாட்சித் தத்துவத்தை சிறப்பாக செயல்படுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபராகவும், அபுதாபியின் 16-வது ஆட்சியாளராகவும் செயலாற்றிய அவர் அமீரகத்தை உலகின் கவனத்தை ஈர்த்த கூட்டரசாக உருவாக்கி காட்டினார். அமீரக மக்களை நவீன சிந்தனையின் பக்கம் வழி நடத்தியதோடு, சகிப்புத்தன்மை மிக்க தேசமாக அமீரகத்தை கட்டமைத்தார். ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க மக்களின் விரும்பத்தகுந்த தேசமாக அமீரகத்தை மாற்றியதோடு தொழில் வளமிக்க பூமியாகவும் உருவாக்கினார்.
Month:
MKP கத்தார் பெருநாள் ஒன்று கூடல்…
மே:12., மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் நோன்பு பெருநாள் சந்திப்பு நிகழ்வு மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் மஜக ஓமன் மண்டல தலைமையக பொருப்பாளர் உத்தமபாளையம் முஹம்மது உவைஸ், அவர்கள் பங்கேற்றார். இந்நிகழ்வில் மண்டல துணைச் செயலாளர் பரங்கிப்பேட்டை ரஜ்ஜாக் நீதி போதனை வழங்க நிகழ்ச்சி ஆரம்பமானது, இதனை தொடர்ந்து மண்டல செயலாளர் ஆயங்குடி யாசின், அவர்கள் கடந்த மாதம் நடைபெற்ற "இதயங்களை இனைப்போம்" மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பான முறையில் நடத்தப்பட்டதை பாராட்டி நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார். மேலும் பேரவையின் வளர்ச்சி, கிளைகள் மறுசீரமைப்பு மற்றும் புதிய கிளைகள் உருவாக்குவது குறித்து பொருப்பாளர்களை நியமித்து நிர்வாகிகள் அனைவரும் ஆலோசனைகளை வழங்கினார். இதில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது : 1.பலஸ்தீன மக்களின் துயரங்களை வெளிப்படுத்திய அல் ஜெசீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஷெரீன் அபு அவர்கள் ஜியோனிஸ ஆக்ரமிப்பு படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார், இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை
அமைச்சர் KN.நேரு அவர்களுடன் மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது சந்திப்பு..!!
சென்னை.மே.12., சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக நகரில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இடத்தேர்வு செய்து அடிக்கல் நாட்டியுள்ளனர். புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்தேர்வை எதிர்த்து அனைத்து கட்சிகள் மற்றும், அமைப்புகள் சார்பாக ஒரு கூட்டமைப்பு உருவாக்கப் பட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டக் குழுவினர் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் தலைமையில் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை நேரில் சந்தித்து பழைய பேருந்து நிலையத்தையே விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையத்தை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் நான் நேரில் வந்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து பின்னர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தொடங்குவதாகவும் அதுவரை தற்போதைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைப்பதாகவும் உறுதி கூறினார். அமைச்சர் அவர்களுடன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி அவர்களும் உடன் இருந்தனர். இச்சந்திப்பில் புதிய பேருந்து நிலைய எதிர்ப்பு குழு தலைவரும், மஜக மாநில துணைச் செயலாளருமான
மஜக வேலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம்!மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு!
வேலூர்., மே.11. வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் வேலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். மஜக மாநில துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான SG.அப்சர் சையத் அவர்களும் பங்கேற்றார். இதில் கட்சியின் வளர்ச்சி பணிகள், புதிய கிளைகளை கட்டமைத்தல், வேலூர் மாநகரில் விரைவில் மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குதல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. பிறகு அவைத் தலைவர் நாசர் உமரீ அவர்களின் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முஹம்மது யாஸீன், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், கஸ்பா ஏஜாஸ், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில், இளைஞரணி செயலாளர் அமீன், இளைஞரணி துணை செயலாளர் சாதிக், ஹயாத், ஹைதர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 10.05.2022
அடியக்கமங்கலத்தில் மஜகவின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
மே:10., திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பொது மக்களின் தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் PMA. சீனி ஜெஹபர் சாதிக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஜெய்லா மைதீன் ட்ரஸ்ட் M.தமிமுன் அன்சாரி, அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா, லியக்கத் அலி (துபை மண்டலம்), ஜெய்னுலாப்தீன், ஜெய்னுதீன், ஜப்ருல்லா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மஜக_திருவாரூர்_மாவட்டம் 09.05.2022