ஆக:31., புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஊட்டி மார்கெட்டில் உள்ள கடைகளை முன்னறிவிப்பின்றி சீல் வைத்து வணிகர்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஊட்டி நகராட்சி ஆணையர் செயல் பட்டிருக்கிறார். ஊட்டி நகராட்சி மார்கெட்டில் 1700 வியாபாரிகள் மற்றும் 1500 பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் செயலாற்றி வருகின்றனர். கடந்த 2007ல் நிர்ணயிக்கப்பட்ட மொத்த வாடகை தொகையில் 50 விழுக்காடு உயர்த்தி நகரமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இந்த தீர்மானத்தை ரத்து செய்து ஊட்டி நகராட்சி கடைகளின் வாடகை மொத்த தொகையாக இருந்த ஒரு கோடியே 92 லட்சத்தை, 13 கோடி ரூபாயாக உயர்த்தியது. இது வணிகர்களை சிரமத்தில் ஆழ்த்தியது. இதனை ஏற்க மறுக்கும் கடைகளை ஏலம் விடவும் அதிமுக அரசு ஏற்பாடு செய்தது. ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி அவர்கள் தான் , அன்றும், இன்றும் ஊட்டி நகராட்சியின் ஆணையாளராக தொடர்கிறார். இவரது அணுகுமுறைகள் வணிகர்களாலும், மக்களாலும் கண்டிக்கப்படுகிறது. இவர் எவ்வித முன்னெச்சரிக்கை
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்டப் பொருளாளராக, பத்தமடை.P.M.முகம்மது கனி 25, 7D, திப்புசுல்தான் தெரு, பத்தமடை. அலைபேசி; 7826049128 மாவட்ட துணை செயலாளராக, A.R.ஹாஜா 8/28-1, ஆற்றங்கரை பள்ளிவாசல் மெயின்ரோடு, திருவம்பலாபுரம், இராதாபுரம், திருநெல்வேலி; 627130. அலைபேசி; 9791350766. ஆகியோர் நியமனம் செய்யபடுகின்றார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுகொள்கின்றேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 30.08.2021
ஈழத் தமிழர்களின் குடியுரிமைக்கு என்றும் குரல்கொடுப்போம் …
காணொளி கருத்தரங்கில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு! தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இது தொடர்பான காணொளி வழி கருத்தரங்குகள் தோழர்கள் இராசன் காந்தி, அருள், மோகன்தாஸ் போன்றோர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் 34-வது அமர்வில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசிய தாவது... தாய் மண்ணை துறந்து, புலம் பெயர்ந்து, இன்னொரு நாட்டில் அகதிகளாக வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை நான் அறிவேன். வட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும், பர்மாவின் ரோஹிங்யாக்களும் அன்று நீங்கள் அடைந்த துயரை இன்று அனுபவிக்கிறார்கள். உள்நாட்டு போர்கள், உரிமை போர்கள் காரணமாக அப்பாவி மக்கள் அகதிகளாக அடையும் துன்பங்கள் அளவிட முடியாதவை. நான் சிறுவயதிலிருந்தே ஈழத்தமிழர்களின் போராட்டங்களை உன்னிப்பாக கவனித்து வருபவன். ஏனெனில் எனது ஊர் தோப்புத்துறை இலங்கைக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது. அரை மணி நேரத்தில் விரைவு படகில் இலங்கை கரைக்கு சென்று விட முடியும். வேதாரண்யத்தில் யாழ்ப்பாண வீதி என ஒன்று இருக்கிறது. இலங்கையின் இயல்பான இயற்கை அமைப்பை எனது பகுதியில் பார்க்க முடியும். நான்
கோவையில் மஜக முன்னெடுப்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்! திரளானோர் பயனடைந்தனர்!
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னெடுப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பொன்விழா நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர். IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாவட்ட பொருளாளர் ரியாஸ், காஜா,மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 29.08.2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய ஜனநாயக கட்சியின், மதுரை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு. மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் மாவட்டங்களாக இனி செயல்படும், தற்போது மதுரை மாவட்ட நிர்வாகிகளாக செயல்பட்டு வரும் நிர்வாகத்தினர் இனி மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகளாக செயல்படுவர், மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட செயலாளராக, N.முபாரக் அலி த/பெ; நைனார் முகம்மது கிடாரிபட்டி, மேலூர் மதுரை அலைபேசி; 9677996150 மாவட்ட பொருளாளராக, B.செந்தில் த/பெ; A.போஸ் 23. மூவேந்தர் நகர் 3வது தெரு, மேலூர் அலைபேசி; 9843238067 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 29.08.2021