மஜக தலைமையக அறிவிப்பு.! மனிதநேய ஜனநாயக கட்சியின், திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது ஆசிப் மற்றும் கட்டிமேடு கிளை துணை செயலாளர் யாசர் அராபத் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர்கள் வகிக்கும் பொறுப்பு மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் ஆகியவையில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுடன் நிர்வாக ரீதியாக எந்த தொடர்பும் வைத்து கொள்ளவேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 02.04.2021
Month:
மயிலை சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் பிரச்சாரம்..! திரளான மஜகவினர் பங்கேற்பு..!
சென்னை.ஏப்ரல்.02., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மயிலை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு.வேலு அவர்களை ஆதரித்து திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச்செயலாளர் அப்துல் கையூம் தலைமையில் திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #MJK2021 #TNElections2021 02.04.2021
கோவை தெற்கு தொகுதி_காங்கிரஸ் வேட்பாளருடன் மஜகவினர் பிரச்சாரம்!
கோவை:ஏப்.02., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு. மயூரா ஜெயக்குமார், அவர்கள் போட்டியிடுகிறார். அவர் இன்று தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தோழமை கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரித்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வணிகர்சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண்,நெளபல்பாபு, ஆகியோர் தலைமையில் மஜக வினர் திரளாக பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #கோவை_தெற்கு_சட்டமன்ற_தொகுதி 01.04.2021
கோட்டைப்பட்டினத்தில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLAவுக்கு வரவேற்பு!
ஏப்.02, கோட்டைப்பட்டினம் ஆனா அறக்கட்டளை வளாகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் கொள்கை முடிவுக்கு வாழ்த்து கூறி, சால்வை அணிவித்து வரவேற்பு செய்தனர். அவர்களிடம் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அறந்தாங்கி தொகுதி காங். வேட்பாளர் S.T. ராமச்சந்திரன் அவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் சம்பந்தமாக மஜக பொதுச்செயலாளர் கேட்டறிந்தார். மேலும், கூட்டணி நிர்வாகிகள் தேர்தல் தினத்தன்று அதிகாலையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவுகளை துரித படுத்துமாறும் அறிவுறுத்தினார். இதில், மஜக மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ், மாநில விவசாய அணி செயலாளர் பேராவூரணி சலாம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம். 01.04.21
அறந்தாங்கி ஒன்றியத்தில் மஜக தேர்தல் பரப்புரை! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு!!
ஏப்.02, அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் S.T. ராமசந்திரன் அவர்களுக்கு 'கை' சின்னத்தில் வாக்குகள் கேட்டு ஒன்றித்திற்குட்பட்ட பத்திற்கும் அதிகமான ஊராட்சி பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் நேற்று மஜக சார்பில் பரப்புரை செய்யப்பட்டது. மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் மற்றும் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி ஆகியோர் வேட்பாளரை ஆதரித்து 'கை' சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசினர். இதில், மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் தலைமையில் அணி நிர்வாகிகள் முகம்மது யாசின், பகுருதீன் உள்பட ஒன்றியத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று வாக்கு சேகரித்தனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு, #அறந்தாங்கி_சட்டமன்றத்தொகுதி. #MJKitWING #TNElection2021