திருவண்ணாமலை.ஏப்ரல்.,02 திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திரு.எ.வ.வேலு அவர்கள் திருவண்ணாமலைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரித்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட துணை செயலாளர் அமிர்கான் தலைமையில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #திருவண்ணாமலை_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு 02.04.2021
Month:
ஐடி ரைடு என்ற பெயரில் அச்சுறுத்தலா? மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கண்டனம்..!
தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இக்கூட்டணியை அச்சுறுத்தும் நோக்கோடு திமுக தலைவர் அண்ணன் திரு.தளபதி ஸ்டாலின் அவர்களின் மகள் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சார்பில் சோதனை நடைபெற்றுவருவது உள்நோக்கம் கொண்டதாகும். சமீப காலமாக திமுகவினரை குறிவைத்து இத்தகைய அணுகுமுறைகள் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது. இப்படி நெருக்கடிகள் கொடுத்தால் களத்தில் உளவியல் ரீதியாக சோர்ந்துவிடுவார்கள் என்பது தான் இதன் நோக்கமாகும். இதன் மூலம் மத்திய பாஜக அரசின் கிளை நிறுவனம் போல் மத்திய வருமான வரித்துறை செயல்படுகிறதோ? என்ற சந்தேகம் மீண்டும் வலுத்து இருக்கிறது. இதையும் கடந்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பெறும் என்பதையும், இதுபோன்ற சோதனைகள் இக்கூட்டணியின் தொண்டர்களுக்கு மேலும் உத்வேகத்தையும் தரும் என்பதையும் சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 2.4.2021
கொள்ளுமேட்டில் பானை சின்னத்திற்கு ஆதரவாக மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது அவர்கள் பரப்புரை!
ஏப்.02, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொள்ளுமேடு ஊராட்சியில் மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன்ரசீது அவர்கள் தேர்தல் பரப்புரை செய்தார். அத்தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் சிந்தனை செல்வன் அவர்களுக்கு 'பானை' சின்னத்தில் வாக்கு கேட்டு கடைத்தெருவில் பேசினார். முன்னதாக அவரை அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்வுகளில், மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் O.R ஜாகீர் ஹுசைன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கியாசுதீன், கொள்ளுமேடு ரியாஸ், நிர்வாகிகள் ஹம்ஜா, முசரப் உள்பட அப்பகுதிகளை சேர்ந்த மஜக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு, #காட்டுமன்னார்கோயில்_சட்டமன்றத்தொகுதி. #MJKitWING #TNElection2021
திருவாடானை காங்கிரஸ் வேட்பாளர் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன் சந்திப்பு..
ஏப்.02., மச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவாடானை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. #கருமாணிக்கம் அவர்கள் நேற்று இரவு #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து பரப்புரைக்கு அழைப்பு விடுத்தார். நேரமின்மையால் காணொளி ஒன்றின் மூலம் பரப்புரை செய்து மஜகவினர் அதை மக்களிடம் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாக கூறினார். அதன்பிறகு திருவாடானை தொகுதி மஜகவினரை தொடர்பு கொண்டு இறுதி கட்ட பணிகளை தீவிரப்படுத்தமாறு பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டார். திருவாடானை தொகுதியில் மஜக துணை பொதுச்செயலாளர் மண்டலன் ஜெய்னுலாப்தீன் அவர்களின் தலைமையில் பரப்புரை பணிகள் ஒருங்கிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில் மாநில துணை செயலாளர் நாகை முபாரக், ஐடி விங் மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ், மாவட்ட செயலாளர் இலியாஸ், துணை மாவட்ட செயலாளர் முஸம்மில், எமனை சாகுல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, அணி நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #இராமநாதபுரம்_மாவட்டம் 01.04.21
லால்பேட்டையில் மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை பட்டியலிட்டு மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது அவர்கள் வாக்கு சேகரிப்பு!!
ஏப்.02, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சிந்தனை செல்வன் அவர்களுக்கு 'பானை' சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு மஜக பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் பரப்புரை செய்தார். லால்பேட்டை நகர் முழுவதும் திறந்த வாகனத்தில் வாக்குக் கேட்டபடி சென்றார், அவருடன் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் மஜக கொடிகளுடன் பானை சின்னம் பொறித்த பதாகைகளை ஏந்தி அவருடன் மஜகவினர் அணிவகுத்து வந்தனர். சிங்கார வீதி மற்றும் புது பஜார் உள்ளிட்ட இடங்களில் திரண்டிருந்த மக்களிடையே மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கை திட்டங்களான நீட், குடியுரிமை திருத்த சட்டம், புதிய வேளாண் சட்டங்கள், உதய் மின் திட்டம், ஒரே ரேஷன்கார்டு திட்டம் போன்றவற்றின் பாதிப்புகளை விளக்கி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் அதிமுகவை அகற்றிட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சின்னமான 'பானை' க்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வுகளில், மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் O.R ஜாகீர் ஹுசைன், நிர்வாகிகள் கியாசுதீன், ஹம்ஜா, முசரப், பேரூர் செயலாளர் ஜெகபர் சாதிக்