
கோவை:ஜன.01.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 ஆவது நாள் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிறைவு பெறுவதை முன்னிட்டு கோவையில் பல இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டது.
அதனடிப்படையில் கோவை கிழக்கு பகுதிக்குட்பட்ட கரும்புக்கடையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் அபு, கிழக்கு பகுதி ஹக்கீம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திரளானோர் பங்கேற்று மஜக வின் மக்கள் நலப்பணிகளை தாங்கள் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் தங்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்ற வேண்டும் எனக்கூறி ஆர்வத்துடன் தங்களை மஜக வில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர்கள் சதாம், செய்யது, மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
01.01.2021