
மார்ச்.26,
மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று நாகப்பட்டினத்திலிருந்து பரப்புரையை தொடங்கினார்.
நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்கு கேட்டு ஆதலையூரில் வாக்கு சேகரித்தார்.
விரைவில் நாகை நகராட்சியிலும் பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏப்ரல் 04 அன்று கோவையில் அவரின் பரப்புரை நிறைவடைவதாக பரப்புரை சுற்றுப்பயணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பரப்புரையில் வேட்பாளர் ஷாநவாஸ் அவர்களும் பங்கேற்றார்.
இதில் மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ்தீன், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், துணை செயலாளர் முன்சி யூசுப்தீன், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், குவைத் மண்டல துணை செயலாளர் பாசில், மாவட்ட அணி நிர்வாகிகள் IT Wing நிசாத், ஆதினங்குடி சாகுல், பேபி ஷாப் பகுருதீன், முத்து, ஒன்றிய துணை செயலாளர் பாவா, ஆதலையூர், ஏனங்குடி, கேதாரிமங்கலம், வவ்வாலடி, பாக்கம் கோட்டூர் கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#நாகப்பட்டினம்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021