கோவை:மார்ச்.29., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை கிணத்துகடவு தொகுதியில் குறிச்சி பிரபாகரன், அவர்கள் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோவை குறிச்சிபிரிவு இட்டேரி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் வாக்கு சேகரித்து உரையாற்றினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் இருக்கக்கூடிய 26 மருத்துவ கல்லூரிகளில் நம்முடைய மாணவர்களுடைய மருத்துவ கனவு பறிபோகின்ற அளவிற்கு நீட் தேர்வு நடத்தி சேர்க்கை நடைபெறுகிறது, திமுக ஆட்சிக்கு வந்தால் அந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின், அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார் எனவே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மருத்துவ மாணவர்களின் கனவை நனவாக்க பாடுபடுவோம் என்று பேசினார். மேலும் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்களும் உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் பகுதி, கிளை நிர்வாகிகள், மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #கோவை_மாநகர்_மாவட்டம் 29.03.2021
Month:
ஆலந்தூரில் தா மோ அன்பரசன் அவர்களை ஆதரித்து வீதிவீதியாக பரப்புரை.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு.!
சென்னை.மார்ச்.29., இன்று சென்னை ஆலந்தூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து, ஆலந்தூர் மார்க்கெட் வீதியில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பரப்புரை செய்தார். இந்நிகழ்வுகளில், மாநிலச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர், மாவட்ட செயலாளர் ஆலந்தூர் அல்தாஃப், பொருளாளர் சலீம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜிந்தா மதார், ஜெய்னுதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர், தில்சாத், ஷாஜகான், ECR சமது, அப்துல் அஜீஸ், ஆலந்தூர் பகுதி செயலாளர் அமீன் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக மஜக நிர்வாகிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மஜக தொண்டர்களும் கொடிகளுடன் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #மஜக_தேர்தல்_பணிக்குழு, #ஆலந்தூர்_சட்டமன்றத்தொகுதி #MJKitWING #TNElection2021
திருக்கோயிலூர் தொகுதி திமுக வேட்பாளருடன் மஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு!
மார்ச்.29, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருக்கோயிலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முனைவர் க. பொன்முடி அவர்கள் திருக்கோவிலூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். வேட்பாளருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்று 'உதயசூரியன்' சின்னத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்தனர். இருச்சக்கர வாகனங்களில் மஜக கொடிகளுடன் திரளான மஜக செயல்வீரர்கள் வேட்பாளருடன் எழுச்சியோடு அணிவகுத்து சென்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு, #திருக்கோயிலூர்_சட்டமன்றத்தொகுதி. #MJKitWING #TNElection2021
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக மஜகவினர் வாக்கு சேகரிப்பு!
மார்ச்.29., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் பூங்கோதை ஆலடி அருணா அவர்கள் போட்டியிடுகிறார். அதைத்தொடர்ந்து ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்குறிச்சி பேரூர் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பீர்மைதின், அவர்கள் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளரும் கழகப் பேச்சாளருமான வாவை இனாயத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து உரையாற்றினார். இதில் திரளான மஜக வினர் பங்கேற்றனர். தகவல்: #மஜக_தேர்தல்_பணிக்குழு #ஆலங்குளம்_சட்டமன்ற_தொகுதி #MJKITWING #MJK2021 #TNElection2021 29.03.2021
திருவொற்றியூரில் KP சங்கரை ஆதரித்து வீதிவீதியாக பரப்புரை.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு.!
சென்னை.மார்ச்.28., இன்று சென்னை திருவொற்றியூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் திரு.KP.சங்கர் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து, தாங்கள் பகுதியில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பரப்புரை செய்தார். இந்நிகழ்வுகளில், மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அணீஸ், ஷமீம் அஹமது, நாகை முபாரக், இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர், மாவட்ட செயலாளர் நாசர், பொருளாளர் ஜாபர், துணைச் செயலாளர்கள் நிஜாம், மவ்லானா, பகுதி செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக மஜக நிர்வாகிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மஜக தொண்டர்களும் கொடிகளுடன் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #மஜக_தேர்தல்_பணிக்குழு, #திருவொற்றியூர்_சட்டமன்றத்தொகுதி #MJKitWING #TNElection2021