
மார்ச்.29.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் பூங்கோதை ஆலடி அருணா அவர்கள் போட்டியிடுகிறார்.
அதைத்தொடர்ந்து ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்குறிச்சி பேரூர் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பீர்மைதின், அவர்கள் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைச் செயலாளரும் கழகப் பேச்சாளருமான வாவை இனாயத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
இதில் திரளான மஜக வினர் பங்கேற்றனர்.
தகவல்:
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#ஆலங்குளம்_சட்டமன்ற_தொகுதி
#MJKITWING #MJK2021
#TNElection2021
29.03.2021