
கோவை:மார்ச்.29.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை கிணத்துகடவு தொகுதியில் குறிச்சி பிரபாகரன், அவர்கள் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து கோவை குறிச்சிபிரிவு இட்டேரி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.
அவர் பேசியதாவது,
தமிழகத்தில் இருக்கக்கூடிய 26 மருத்துவ கல்லூரிகளில் நம்முடைய மாணவர்களுடைய மருத்துவ கனவு பறிபோகின்ற அளவிற்கு நீட் தேர்வு நடத்தி சேர்க்கை நடைபெறுகிறது, திமுக ஆட்சிக்கு வந்தால் அந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின், அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார் எனவே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மருத்துவ மாணவர்களின் கனவை நனவாக்க பாடுபடுவோம் என்று பேசினார்.
மேலும் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்களும் உரையாற்றினார்.
இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் பகுதி, கிளை நிர்வாகிகள், மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING #MJK2021
#TNElection2021
#கோவை_மாநகர்_மாவட்டம்
29.03.2021