
கோவை:மார்ச்.29.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கார்த்திகேய சிவசேனாபதி, அவர்கள் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் கோவை செல்வபுரத்தில் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசியதாவது,
தற்போதைய ஆட்சியில் நாம் தமிழகத்தின் பல்வேறு மாநில உரிமைகளை பறிகொடுத்து விட்டோம் தமிழர்களின் வேலை வாய்ப்பு, மொழி சார்ந்த உரிமைகள் ஆகிய வற்றை நாம் மீட்டெடுக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச்செய்வோம் என்று பேசினார்.
அவருடன் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்களும் பங்கேற்றார்.
மேலும் இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உரையாற்றினர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன் மற்றும் மத்திய பகுதி பொறுப்பாளர்கள் ஹனிபா, இப்ராகிம், ஆகியோர் தலைமையில் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING #MJK2021
#TNElection2021
#கோவை_மாநகர்_மாவட்டம்
29.03.2021