மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தில் பல உயிர்பலிகள் ஏற்பட்டு வரும் நிலையில், பெண்கள் இருவர் நிர்வாண படுத்தபட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ பரவி நாடெங்கும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்…
தென்சென்னை கிழக்கு மாவட்டம் பாலவாக்கத்தில் மஜக-வினர் ஒன்றுகூடி பாதிப்படைந்த மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாகவும், மணிப்பூர் மாநில பாஜக அரசு, மற்றும் ஒன்றிய அரசை கண்டித்தும் கைகளில் பதாகை ஏந்தி கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் காதர், மாவட்டத் துணைச் செயலாளர் MD.அலி, தஞ்சை மாவட்ட செயலாளர் ஜாஹிர், மகளிர் அணி ஜமீலா அலி உள்ளிட்ட திரளான மஜக-வினர் பங்கேற்றனர்.