அந்தியூர்:மார்ச்.25., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் அந்தியூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.ஜி. வெங்கடாசலம், அவர்கள் தொகுதிக்குட்பட்ட மலை கிராமமான செங்குளம், கொங்காடை, தாளக்கரை, மணியாச்சி, உள்ளிட்ட 9 மலை கிராம பகுதிகளில் மஜக வினருடன் வாக்கு சேகரித்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே ஷானவாஸ், அவர்கள் தலைமையில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #அந்தியூர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு 24.03.2021
Month:
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளருடன் மஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு!
மார்ச்:25., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைமையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு கோவை கரும்புக்கடை பகுதிகளில் மக்களை சந்தித்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் திரளான மஜக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #தொண்டாமுத்தூர்_சட்டமன்ற_தொகுதி 24.03.2021
வால்பாறை தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு!
மார்ச்.25., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வால்பாறை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் திரு.ஆறுமுகம், அவர்களின் அறிமுக கூட்டம் அம்பராம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்றது . இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர்கள் M.அலாவுதீன், தலைமையில், மஜக வினர் மற்றும் பல்வேறு நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #TNElection2021 #MJK2021 #வால்பாறை_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு 24.03.2021
திருவரம்பூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து மஜகவினர் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரம்!
திருச்சி.மார்ச்.25., மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுகவின் சார்பில் திருச்சி திருவரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட செந்தண்ணீர்புரம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் தலைமையில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆங்காங்கே கோயில் மற்றும் மசூதிகளின் முன்பு கூடியிருந்த மக்களிடையே மஜக-வின் கொள்கை முடிவுகள் குறித்தும் வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ்,துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, சேக் அப்துல்லா, முகமது பீர்ஷா மற்றும் தர்கா பாரூக் நிர்வாகிகள் சேக் தாவூத்,சதாம் உசேன், அன்வர்தீன்,ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #TNElection2021 24.03.2021
பத்தமடையில் பிரச்சாரத்தை துவங்கிய நெல்லை மஜக..!
நெல்லை மார்ச்.24.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக அம்பை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆவுடையப்பன் அவர்களை ஆதரித்து வாக்குசேகரிக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக தெருமுனை பிரச்சாரம் பத்தமடையில் துவங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் பிரச்சார உரை நிகழ்த்தினார், காங்கிரஸ் பிரமுகர் பக்கீர்மைதீன் மஜகவின் துண்டுபிரசூரத்தை வெளியிட முஸ்லீம் லீக் பிரமுகர் பெற்றுக்கொண்டு துண்டுபிரசூரத்தை விநியோகம் செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட கலை இலக்கிய பேரவை அணி செயலாளர் பத்தமடை கனி, சேரை ஒன்றிய செயலாளர் கோதர், செய்யது, பீர்மைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection #நெல்லை_மாவட்டம் 24-03-2021.