
திருச்சி.மார்ச்.25.,
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுகவின் சார்பில் திருச்சி திருவரம்பூர் தொகுதியில் போட்டியிடும் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட செந்தண்ணீர்புரம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் தலைமையில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
ஆங்காங்கே கோயில் மற்றும் மசூதிகளின் முன்பு கூடியிருந்த மக்களிடையே மஜக-வின் கொள்கை முடிவுகள் குறித்தும் வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ்,துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, சேக் அப்துல்லா, முகமது பீர்ஷா மற்றும் தர்கா பாரூக் நிர்வாகிகள் சேக் தாவூத்,சதாம் உசேன், அன்வர்தீன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#TNElection2021
24.03.2021