மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட சுற்றுசூழல் அணி மாவட்ட செயலாளராக, ராபியா.ஷேக் அப்துல் காதர் த/பெ: m Syed Mohammed Ali 138 2nd main road, சாந்திநகர் பாளையங்கோட்டை, திருநெல்வேலி. அலைபேசி: 8122114853. நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 12-01-2021
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளராக, S. செய்யது மீரான் த/பெ: ஷேக் தாவூது குருமாங்குளம் ஆதிரெங்கம், கட்டிமேடு. திருத்துறைப்பூண்டி. அலைபேசி: 9894712771 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 12-01-2021
அமெரிக்காவின் அரசபயங்கரவாதம் தான் உலகஅமைதியைக் குலைக்கிறது! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA குற்றச்சாட்டு!
ஜன: 11., அமெரிக்காவால் சட்டவிரோதமாக கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி தியாகி காசிம் சுலைமானி உள்ளிட்டோருக்கு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 09.01.2021 அன்று சென்னை ஆயிரம் விளக்கு மஸ்ஜிதில் தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் சார்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... இன்று உலக அமைதியை சீர்குலைத்து கொண்டிருப்பது அமெரிக்காவின் அரச பயங்கரவாதம் என்பதே உண்மை . அமெரிக்கா நினைத்தால் உலகின் எந்த நாட்டின் அதிபரையும், இராணுவ தலைவரையும், கொல்ல முடியும் என்ற நிலை நிலவுகிறது, இந்த அதிகாரத்தை அமெரிக்காவுக்கு கொடுத்தது யார்? அமெரிக்கா, தான் நினைப்பதை மட்டுமே எல்லோரும் ஏற்க வேண்டும் என்கிறது. இந்த உலகம் அமெரிக்காவுக்கு மட்டுமானதல்ல... உலகில் வாழும் அனைவருக்குமானது. அமெரிக்கா அணுகுண்டு வைத்திருக்கலாமாம். அமெரிக்க ஆதரவு நாடுகள் வைத்திருக்கலாமாம். அப்படியானால் இந்தியா, வட கொரியா, ஈரான், மற்றும் ஆப்பிரிக்க, நாடுகள் அனைத்திற்கும் அந்த உரிமை உண்டு அல்லவா... தற்காப்பு தேவை எல்லா நாடுகளுக்கும் உள்ளது. ஈரான் மின்சார தேவைக்காக அணு உலைகளில் யுரேனியம் தயாரித்தது . ஆனால் அமெரிக்கா அணு குண்டு தயாரிப்பதாக குற்றம்சாட்டியது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா,
விவசாயிகளுக்கு விருந்தோம்பல் செய்த மஜக…!டெல்லியில்_ஆம்ஆத்மி.. தமிழகத்தில் மஜக என விவசாயிகள் பெருமிதம்…!
ஜன.11, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஜனவரி 9 மற்றும் 10 தேதிகளில் நீதி கேட்கும் நெடும் பயணம் என்ற பெயரில் வாகன அணிவகுப்பும், ஊர்வலங்களும் நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற இந்நிகழ்வுகள் கிராமங்கள், நகரங்களில் பேராதரவை பெற்றுள்ளது. நேற்று தஞ்சாவூரில் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய போராளிகள் திரண்டு வந்திருந்தனர். அங்கு வந்த அனைத்து விவசாயிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரவு உணவு பொட்டலங்கள் வழங்கி உபசரிக்கப்பட்டது. இதனால் விவசாய பெருங்குடி மக்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்தனர். இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.R.பாண்டியன் அவர்கள் விவசாயிகளின் போராட்டங்களுக்கு அரசியலை கடந்து மஜகவும், அதன் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும் ஆதரவளித்து வருவதை சிலாகித்து குறிப்பிட்டார். டெல்லியில் ஆம் ஆத்மி விவசாயிகளை உபசரிப்பது போல தமிழகத்தில் மஜக விவசாயிகளை உபசரிப்பதாக குறிப்பிட்டார். இந்நிகழ்வில் மஜக விவசாய அணியின் மாநில செயலாளர் அப்துல் சலாம், தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் அகமது கபீர், தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஒரத்தநாடு பஷீர், தஞ்சை மாநகர செயலாளர் அப்துல்லா, திருவையாறு ஒன்றிய செயலாளர் ஹபீப் ரஹ்மான் முன்னிலையில் 50
சென்னையில் மதிமுக தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை..! மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது தலைமையில் திரளான மஜகவினர் பங்கேற்பு..!
சென்னை.ஜன.11., இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டது, இச்சம்பவம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் அறிவிப்பை மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் அறிவித்திருந்தார். போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை தொடர்புகொண்டு திரு.வைகோ அவர்கள் ஆதரவு கோரினார். அதனடிப்படையில் இன்று நடைபெற்ற முற்றுகை போரில், மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் திரளான மஜகவினர் ஆவேச அலைகளோடு பங்கேற்றனர். அங்கு நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் கண்டன உரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றினர். நிறைவாக மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் எழுச்சி பொங்க கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் மஜகவினர் கொடிகளோடு திரண்டுவந்து இலங்கை அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர், முற்றுகையின் நிறைவாக அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அனிஸ், திருமங்களம் சமீம், மத்திய சென்னை மேற்கு மாவட்டச்செயலாளர் சாகுல் ஹமீது, கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான், பொருளாளர் அப்பாஸ், வடசென்னை மாவட்ட செயலாளர் அன்வர், தென்சென்னை கிழக்கு