ஜன.18, மத்திய அரசின் 3 உழவர் ஒழிப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்தும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் எதிர்வரும் ஜனவரி 21 அன்று தஞ்சாவூரில் பச்சைக் கொடி பேரணி நடைபெற உள்ளது. இதற்கு மனிதநேய ஐனநாயக கட்சி கள ஆதரவு அளித்துள்ளது. இன்று மயிலாடுதுறையில் துண்டு பிரசுர பரப்புரை மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் ஹாஜா சலீம் தலைமையில் நடைப்பெற்றது. மனிதநேய கலாச்சார பேரவையின் குவைத் மண்டல துணை செயலாளர் K.M.ஷபிர் அஹமது பங்கேற்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து பரப்புரையை தொடங்கி வைத்தார். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள், மக்கள் கூடுமிடங்களில் துண்டு பிரசுர பரப்புரை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. விவசாயிகள் நலனை முன்னிறுத்தி தஞ்சையில் நடைப்பெறும் பேரணியில் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து திரளனோர் சென்று பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டு பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் சங்கை தாஜ்தீன், துணை செயலாளர்கள் ஆக்கூர் ஷாஜஹான், நீடூர் மிஸ்பாஹுதீன், அஜ்மல் உசேன், தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் நீடூர் ஜெப்ருதீன், மாணவர் இந்தியா செயலாளர் அமீருல் அஸ்லம், குத்தாலம் ஒன்றிய விவசாய
Month:
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிடுக… களத்தில் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!
ஜன.18, நாகை தொகுதியில் மார்கழி தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய கிராமங்களை இன்று இரண்டாம் கட்டமாக சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி நாற்றம் வீச தொடங்கியிருப்பதை வயலில் இறங்கி பார்வையிட்டார். பாலையூர், வடகுடி, பெருங்கடம்பனூர், புலியூர், சங்க மங்கலம், சிக்கல், ஆழியூர், தேமங்கலம், பட்டமங்கலம், கடம்பர வாழ்க்கை, கில்லுக்குடி, சிரங்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று விளை நிலங்களை பார்வையிட்டார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது.. தற்போது பெய்த மார்கழி மழையால் விளைச்சல் பரவலாக 100 சதவீதம் பாதித்துள்ளது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிக் கொண்டிருக்கின்றன. பல இடங்களில் நெற்பயிர்கள் முளை விட்டு வளர்ந்திருக்கின்றன. வயல்களில் அறுவடை இயந்திரங்களை இறக்க முடியாத நிலையும் உள்ளது. இதை மத்திய அரசு தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகை முழுமையாக கிடைக்க வழி செய்ய வேண்டும். விளைச்சலில் அடிப்படையில் இல்லாமல் பாதிப்பின் அடிப்படையில் அதை வழங்க வேண்டும். தமிழக அரசு நிலவரத்தை கவனத்தில் கொண்டு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இடுபொருள் இழப்பீடாக வழங்கிய தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என புகார்கள் வருகிறது.
நாகை சிக்கலில் விவசாய கடன் தள்ளுபடி கேட்டு CPM மறியல்! மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆதரவு!
ஜனவரி 18, விவசாயிகள் வாங்கிய அனைத்து கடனையும் ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து நாகை தொகுதி சிக்கலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM ) சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் V. மாரிமுத்து தலைமையில் மறியல் போராட்டம் நடை பெற்றது. அதனை தொடர்ந்து திரளானோர் கைது செய்யப்பட்டனர். அப்போது மார்கழி மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளை சந்தித்துக் கொண்டிருந்த மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மறியல் நடத்தி பிறகு மண்டபத்தில் கைது செய்யப்பட்டிருந்தவர்களை சென்று நேரில் சந்தித்து ஆதரவளித்தார். அப்போது மஜக நாகை ஒன்றிய செயலாளர் ஜலால் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம் 18.01.2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! தென்சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக, 1) T. மணிகண்டன் த/பெ : S. தியாகராஜன் 24, பார்த்தசாரதி புரம், தி.நகர், சென்னை – 17. அலைபேசி: 9841260977 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 17-01-2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! சேலம் மாவட்ட துணை செயலாளர்கள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட துணை செயலாளர்களாக, 1) M.முஹம்மது சபீர் த/பெ; MB.மௌல முகமது அலி 16A,அதியமான் தெரு ஜலால் புறா, சேலம்.1 அலைபேசி ; 7358836224 2) S.M.முஹம்மது சுஹில் த/பெ; D.சையத் முஸ்தபா பழைய மார்க்கெட் தெரு, முகமது புறா, சேலம்.1 அலைபேசி; 9952160816 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 17-01-2021