ஜனவரி 22, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்வும், சமூக நல்லிணக்க பொதுக் கூட்டமும் நடைபெற்றது. மாலை நேர நிகழ்வாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஆம்புலன்ஸை ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் திருமதி P.செல்வி B.sc., அவர்கள் சாவியை அர்ப்பணிக்க தொழில் அதிபரும், சமூக சேவகருமான வா வு சம்சுதீன் ஹாஜியார் அவர்கள் பெற்றுக் கொண்டார். பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சிறப்புரையாற்றினார். பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் N.A தைமிய்யா, முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மஹபூப், வழக்கறிஞர் அஹமது சாஹிப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அனிஸ், காயல் சாகுல், மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், துணை செயலாளர்கள் காதர்பாட்சா, முகமது நஜிப், ராசுக்குட்டி, நகர செயலாளர் இப்னுமாஜா, பொருளாளர் மீரான், துணைச் செயலாளர்கள் சிக்கந்தர் பாஷா, அப்துர்ரஹ்மான் உள்பட திரளான மஜகவினரும், பொதுமக்களும் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தூத்துக்குடி_மாவட்டம்.
Month:
திருவையாறு மஜக ஒன்றிய செயலாளர் திருமணம்..!
ஜனவரி 22, தஞ்சை மாநகர் மாவட்டம் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட் (எ) ஹபீப் ரஹ்மான் அவர்களுக்கும், மணமகள் அனிஷ் பானுக்கும் இடையில் திருமணம் 20 ஜனவரி 20 அன்று நடைபெற்றது. நேற்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மரக்கன்றுகளை பரிசாக அளித்து வாழ்த்தினார். இதில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அகமது கபீர், அமீரக மண்டல செயலாளர் அசாலி, திருப்பந்துருத்தி நகர செயலாளர் காலித், பொருளாளர் அசார், துணைச் செயலாளர்கள் பாரிஸ், சலீம் மற்றும் மஜக உறுப்பினர்கள் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_மாநகர்_மாவட்டம். 21.01.2021
கோட்டைப்பட்டினம் மஜக நிர்வாகி மரணம்! பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், மணல்மேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினம் கிளையின் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைச் செயலாளர் சகோதரர் இப்ராகிம் (48) அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினர் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் பிழைகளை, குறைகளை இறைவன் மன்னித்து அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 22.01.2021
மஜக கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பங்கேற்பு!
ஜன.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை AK.சுல்தான்அமீர், அவர்கள் பங்கேற்று 30ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள காந்தி படுகொலை கருத்தரங்கத்தின் நிகழ்ச்சி நிரல் பட்டியலை வெளியிட்டார். பின்பு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், அணி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினர். மேலும் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இஷாக், ஆகியோரும் உரையாற்றினர். இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்டபொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், முஸ்தபா, அபு, தொழிற்சங்க மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாவட்ட பொருளாளர் ஷாஜகான், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், IKP மாவட்ட செயலாளர் ஹனீப், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா. ஆகியோர்
விவசாய சட்டங்களை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராடுவோம்…! தஞ்சையில் பச்சைக்கொடி பேரணியை தொடங்கி வைத்து மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி..!
ஜனவரி 21, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், சர்ச்சைக்குரிய 3 உழவர் ஒழிப்பு சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் இன்று தஞ்சாவூரில் பச்சைக் கொடி பேரணி நடைபெற்றது. இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி கள ஆதரவை அளித்திருந்தது. விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள், சமூக நீதி உணர்வாளர்கள், விவசாய ஆதரவாளர்கள் என பலரும் வாகனங்களில் அலை அலையாக உணர்வுப்பூர்வமாக வந்திருந்தனர். காவிரி உரிமை மீட்பு குழு தலைவர் பெ.மணியரசன் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் பச்சைக் கொடி பேரணியின் நோக்கத்தை விளக்கி பேசினார். தொல்காப்பியர் சதுக்கம் அருகில் எழுச்சியோடு திரண்டிருந்தவர்களை பேரணி குழுவினரும், மஜக விவசாய அணியினரும் ஒழுங்குப் படுத்தியவாறு இருந்தனர். காலை 10 மணி முதலே டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மஜக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் வாகனங்களில் வந்து அப்பகுதியில் குழுமினர். மஜக மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மஜக மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம் ஆகியோர் வருகை தந்த மஜகவினருக்கு வழிகாட்டல்களை வழங்கியவாறு இருந்தனர். 11.30 மணி அளவில் பேரணியை தொடங்கி வைத்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார். அப்போது, கடந்த 10 நாட்களாக பெய்த தொடர்