மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்டப் பொருளாளராக, I.முஹம்மது இப்ராஹிம் த\பெ; S.முஹம்மது இக்பால் 21/10, செந்தில் வைகை Aprt., தமிழர் வீதி, பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை 600094. அலைபேசி; 9884440551 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 26-09-2020
Month:
தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்து! விருதுநகர் மஜக சார்பில் துண்டறிக்கை விநியோகம்!!
செப்.26., கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கடந்த 16.09.2020 அன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். சட்டமன்றத்தில் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையினை விருதுநகர் மாவட்ட மஜக சார்பில் துண்டறிக்கையாக தயார் செய்து இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகள் முழுவதும் பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர். இதில் மாவட்டத்திற்குட்பட்ட மஜகவின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் வெவ்வேறு இடங்களில் பங்கேற்று விநியோகம் செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #விருதுநகர்_மாவட்டம். 25.09.2020
கன்னியாகுமரியில் மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு!!
நாகர்கோவில் செப்டம்பர் 25. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, M.Com, அவர்களுக்கு காவல்கிணறு சந்திப்பில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பிஜிருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து குமரி மாவட்ட எல்லையான காவல்கிணறு பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் அளவில் வாகன அணி வகுப்பாக அழைத்து வந்தனர். நாகர்கோவில் அப்டா மார்க்கெட் சந்திப்பில் நாகர்கோவில் மாநகர செயலாளர் அமீர்கான், அவர்கள் தலைமையில் இளைஞர்கள் பட்டாளம் மஜக பொருளாளருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்வில் மாநகர நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் பூங்கொத்து கொடுத்து மாநில பொருளாளர் அவர்களை வரவேற்றனர். இந்நிகழ்ச்சிகளில் மாநில துணைச் செயலாளர் காயல்பட்டினம் சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் G.சர்ச்சில், மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிஹர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜீப் ரகுமான், சாதிக் அலி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஷெரீப், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாநகர, பகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
பாடகர் SPB மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிசிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் SP.பாலசுப்ரமணியன் அவர்கள் இறந்த செய்தியறிந்து வருத்தமுற்றோம். 6 தேசிய விருதுகளை பெற்று, 16 மொழிகளில், 40 ஆயிரம் பாடல்களை பாடியது அவரது சாதனையாக பாராட்டப்படுகிறது. அவரது மரணம் கலைத்துறைக்கு ஒரு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் , ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர் , #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 25.09.2020